தலைவர் என்ட்ரி.. களைகட்டும் மீனா 40 நிகழ்ச்சி.. ரசிகர்கள் கொண்டாட ஒரு தருணம்!

சென்னை : நடிகை மீனா சிறுவயதில் இருந்தே தன்னுடைய திரையுலகப் பயணத்தை துவங்கி தற்போதுவரை தொடர்ந்து வருகிறார்.

அவர் திரையுலகில் நடிக்கத் துவங்கி தற்போது 40 ஆண்டுகளை கடந்துள்ளார். இதையொட்டி சென்னையில் இன்று மாலை மீனா 40 என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர். ரசிகர்களுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் என்று கூறப்பட்டுள்ளது.

நடிகை மீனா

நடிகை மீனா

நடிகை மீனா இளம் வயதிலேயே தன்னுடைய திரைப்பயணத்தை துவங்கிவிட்டார் சிவாஜியுடன் நெஞ்சங்கள் என்ற படத்தில்தான் தமிழில் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். ரஜினியுடன் சிறுவயதாக இருந்தபோது மீனா நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படம் ரசிகர்களின் எவர்கிரீன் பேவரைட் படமாக உள்ளது.

90களின் நாயகி

90களின் நாயகி

இதையடுத்து நாயகியாக 90களில் துவங்கிய மீனாவின் பயணம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிப்படங்களிலும் மீனா நடித்துள்ளார். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டுள்ளார். ரஜினி -மீனா காம்போவில் வெளியான முத்து படம் ஜப்பானிலும் திரையிடப்பட்ட நிலையில், மீனாவிற்கு ஜப்பான் ரசிகர்களும் உள்ளனர்.

6 மொழிகளை அறிந்த மீனா

6 மொழிகளை அறிந்த மீனா

சிறுவயதிலேயே நடிக்க வந்துவிட்டதால் தனியாக தன்னுடைய படிப்பை தொடர்ந்து, முதுகலை பட்டமும் பெற்றுள்ளார். பயிற்சி பெற்ற பரதநாட்டிய கலைஞரான மீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என 6 மொழிகளில் சரளமாக பேசக்கூடிய திறமை பெற்றவர்.

மீனா மகள் நைனிகா

மீனா மகள் நைனிகா


கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்ற மென்பொருள் பொறியாளரை திருமணம் செய்துக் கொண்ட மீனாவிற்கு, நைனிகா என்ற மகள் உள்ளார். இவரும் தெறி, பாஸ்கர் தி ராஸ்கல் போன்ற படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தெறி படத்தில் விஜய்யுடன் நடித்திருந்த நைனிகாவின் நடிப்பு மிகுந்த பாராட்டிற்கு உள்ளானது.

40 ஆண்டுகளை கடந்த மீனா

40 ஆண்டுகளை கடந்த மீனா

கடந்த 1982ம் ஆண்டில் இவரது முதல் படம் நெஞ்சங்கள் வெளியானது. இந்நிலையில், இந்தப் படம் வெளியாகி 40 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில், மீனாவும் தன்னுடைய திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து சென்னை நீலாங்கரையில் மீனா 40 என்ற நிகழ்ச்சி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

#Meena40 நிகழ்ச்சி

#Meena40 நிகழ்ச்சி

Behindwoods மற்றும் Say yes events இணைந்து நடத்தவுள்ள இந்த நிகழ்ச்சியை மீனாவின் நெருங்கிய தோழியான கலா மாஸ்டர் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்து நடத்தவுள்ளனர். இன்று மாலை 5 மணிக்கு நீலாங்கரையில் உள்ள ஆர்கே கன்வென்ஷன் சென்டரில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படவுள்ளது.

மீனா நன்றி

மீனா நன்றி

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் நடிகை மீனா நன்றி தெரிவித்துள்ளார். ஒரு ஹீரோயினின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் இந்த நிகழ்ச்சி, மிகச்சிறந்த பெருமையான நிகழ்ச்சியாக உள்ளதாக மீனா தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சி தனக்கு பதட்டத்தையும் உற்சாகத்தையும் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X