Rajinikanth: அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் இணையும் ரஜினிகாந்த்.. மாஸ் காட்ட தயாராகும் சூப்பர்ஸ்டார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் 70 வயதை கடந்த நிலையிலும் அடுத்தடுத்து இளம் இயக்குனர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த ஜெயிலர் படம் கடந்த ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் கடந்த பிப்ரவரியில் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினி நடித்திருந்த லால் சலாம் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினி. அடுத்த மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி இணையவுள்ள கூலி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களில் ரஜினி இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் தன்னை இணைத்து வருகிறார். கடந்த ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்த ஜெயிலர் படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 600 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்தது. இந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் அடுத்ததாக ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் நடித்திருந்த லால் சலாம் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியானது. படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினி நடித்திருந்த நிலையில் இந்த கேரக்டர் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது
அடுத்தடுத்த படங்கள்: ஆனால் லால் சலாம் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் இம்மாதமே துவங்கவிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கூலி படம்: இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ப்ரமோ ஆகியவை முன்னதாக வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டில் வெளியான லியோ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக படத்தின் 2ம் பகுதி குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் கூலி படத்தை எந்தவித கமிட்மெண்டும் இல்லாமல் சுதந்திரமாக இயக்கவுள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக தனது பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் படங்களிலும் நடிக்க ரஜினிகாந்த் அடுத்தடுத்து கமிட்டாகவுள்ளார்.
பாலிவுட்டில் நடிக்கும் சூப்பர்ஸ்டார்: அடுத்ததாக சல்மான் கான் -அட்லி கூட்டணியில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள புதிய பாலிவுட் படத்தில் ரஜினிகாந்த் முன்னணி கேரக்டரில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் இரண்டு ஹீரோ சப்ஜெக்டாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தான் மிகப்பெரிய ரஜினி வெறியன் என்று அட்லி முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்திருந்த நிலையில் அவர் தனது அடுத்த படத்தில் ரஜினியையும் பாலிவுட் முன்னணி நடிகரான சல்மானையும் இணைக்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் 2 படம்?: இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் முன்னணி தயாரிப்பாளர் சஜித் நடியாவாலா தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்த படத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்து பாலிவுட்டில் ரஜினி கமிட் ஆகவுள்ள நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அவர் இணையுள்ளதாக கூறப்பட்டுள்ள ஜெயிலர் 2 படம் எப்போது சூட்டிங் துவங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி இணையுள்ள கூலி படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாக உள்ளதாக பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











