மீண்டும் இணையும் தளபதி கூட்டணி.. ரஜினிகாந்த் பிறந்தநாளில் வெளியாகும் மாஸ் அறிவிப்பு?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். கடந்து சில தினங்களாக அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இந்த படத்தின் சூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கூலி படத்தின் ஷூட்டிங்கில் வரும் 15ம் தேதி முதல் மீண்டும் ரஜினிகாந்தின் இணையவுள்ளதாக படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் ரஜினிகாந்த இணையுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குனர் மணிரத்னம் கூட்டணியில் மீண்டும் ரஜினிகாந்த் கைகோர்க்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

rajinikanth maniratnam thalapathy movie


நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் -இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் 33 ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது தளபதி படம். மகாபார கதையை மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதைக்களத்தை உருவாக்கியிருந்தார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டியின் நட்பு மிகப்பெரிய அளவில் கையாளப்பட்டிருந்தது. மேலும் படத்தில் அரவிந்த்சாமி, ஷோபனா, பானுப்பிரியா உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். இந்த படம் அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து மிகப்பெரிய வெற்றியையும் கொடுத்தது.

தளபதி படம்: தளபதி படத்தின் கதைக்களம், ரஜினியின் ஸ்டைல், மம்முட்டியின் கேரக்டர், அரவிந்த்சாமியின் ஃப்ரெஷ்னெஸ், ஷோபனா மற்றும் பானுப்ரியாவின் அழகு, கவர்ச்சி என இந்த படத்தின் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இதனிடையே இந்த படத்திற்கு மணிரத்னத்தின் ஸ்கிரிப்ட் மிகப்பெரிய அளவில் துணை நின்றது. ரஜினியின் கேரியர் பெஸ்ட் படங்களில் தளபதி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் கூட்டணி மாஸ் காட்டியிருந்தது. இவர்கள் மீண்டும் இணையாமல், அதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் இருந்த நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வேட்டையன் படம்: தற்போது ரஜினியின் வேட்டையன் படம் வரும் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதனிடையே தற்போது அவர் கூலி படத்திலும் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விசாகப்பட்டணத்தில் கூலி படத்தின் சூட்டிங் நடந்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினியின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் இந்த படத்தின் ஷூட்டிங்கில் அவர் தொடர்ந்து பங்கேற்க முடியவில்லை. இந்நிலையில் வரும் 15ம் தேதி முதல் அவர் கூலி படத்தின் சூட்டிங்கில் மீண்டும் இணைவார் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் இணையுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ரஜினிகாந்த் -மணிரத்னம் கூட்டணி: இந்த படங்களை தொடர்ந்து மணிரத்னம் கூட்டணியில் ரஜினிகாந்த் இணைவார் என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளன. இந்த படத்தின் அறிவிப்பை ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இந்த படத்தில் மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணி 34 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது. இதே போல மணிரத்னம் -ரஜினிகாந்த் கூட்டணி குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X