நீ நடந்தால் நடை அழகு.. வாக்கிங் போனால் வெயில் அழகு.. கேளம்பாக்கம் பண்ணை வீட்டில்.. ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது பண்ணை வீட்டில் வாக்கிங் போகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Recommended Video

Rajinikanth Royal Look in Lamborghini Goes Viral

கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு அமலில் உள்ளது.

இதனால் அரசியல் தலைவர்கள் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கின்றனர்.

அடிக்கடி போட்டோக்கள்

அடிக்கடி போட்டோக்கள்

இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 4 மாதங்களாக வீட்டிலேயே இருந்தார். பிரதமர் மோடி வேண்டுகோளுக்கு இணங்க வீட்டு வாசலில் நின்று மணி அடித்தது மற்றும் மின்விளக்குகளை அணைத்து மெழுகு வர்த்தியை ஏற்றுவது ஆகியவற்றை செய்தார்.

பாலச்சந்தரின் புகழாரம்

பாலச்சந்தரின் புகழாரம்

அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. தொடர்ந்து சாத்தான் குளம் விவகாரம் குறித்தும் குரல் கொடுத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலச்சந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு காணோளி மூலம் அவருக்கு புகழாரம் சூட்டினார்.

ஹேஷ்டேக் ட்ரெண்ட்

ஹேஷ்டேக் ட்ரெண்ட்

இந்நிலையில் நேற்று முன்தினம் போயஸ் கார்டன் வீட்டில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்தப்படி தானே காரை ஓட்டிச் சென்றார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதனை தொடர்ந்து தலைவர் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டானது.

சவுந்தர்யா வீட்டிற்கு..

சவுந்தர்யா வீட்டிற்கு..

ரஜினிகாந்த் தானே கார் ஓட்டியப்படி எங்கே சென்றார் என்ற கேள்வி எழுந்த நிலையில், இளைய மகள் சௌந்தர்யா, மருமகன் விசாகன் மற்றும் பேரன் வேத் ஆகியோருடன் இருக்கும் போட்டோக்கள் வெளியானது.
இதனால் நடிகர் ரஜினிகாந்த் தனது இளையமகள் சவுந்தர்யா வீட்டிற்குதான் சென்றுள்ளார் என தெரிந்தது.

தோட்டத்தில் வாக்கிங்

தோட்டத்தில் வாக்கிங்

கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகர் ரஜினிகாந்த் மகள், மருமகன் மற்றும் பேரனுடன் ஓய்வெடுத்து வருகிறார். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது வீட்டின் பண்ணை தோட்டத்தில் வாக்கிங் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.

பண்ணை வீட்டில் நடைப்பயிற்சி

வழக்கமாக போயஸ் கார்டன் இல்லத்தில் காலை 5.30 மணிக்கு உடற்பயிற்சி மேற்கொள்வார் ரஜினிகாந்த். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் இயற்கை சூழல் நிறைந்த கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் நடைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X