மனசிலாயோ பாட்டு ஹிட்டுக்கு அவர்தான் காரணம்.. உற்சாகத்தில் வேட்டையன் ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ளது வேட்டையன். இந்த படத்தின் சூட்டிங், டப்பிங் வேலைகளை நிறைவு செய்துவிட்டு தற்போது கூலி படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேட்டையன் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வேட்டையன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் சூட்டிங்கிலிருந்து சென்னை வந்த ரஜினிகாந்த் நிகழ்ச்சியில் மிகவும் சிறப்பாக பங்கேற்று சிறப்பான பேச்சையும் கொடுத்திருந்தார். இந்நிலையில் தற்போது மனசிலாயோ பாடலின் வெற்றி குறித்து அவர் பேசியுள்ளார்.

rajinikanth vettaiyan movie master dinesh

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் -இயக்குனர் டிஜே ஞானவேல் கூட்டணியில் உருவாகியுள்ள வேட்டையன் படம் மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்திற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். லைகா நிறுவன தயாரிப்பாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் அடுத்தடுத்து இரு பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி மாஸ் காட்டியுள்ளன.

வேட்டையன் இசை வெளியீடு: இதனிடையே நேற்று முன்தினம் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியும் மிகப் பிரமாண்டமாக சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், படம் எப்படி இருக்கிறது என்பதை ரசிகர்கள் தான் பார்த்து சொல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக, சிறப்பான ஏற்பாடுகளுடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், ரசிகர்கள் சிலர் இருக்கைகள் பற்றாக்குறையால் வெளியில் நின்றது குறித்து அறிந்து மிகவும் கஷ்டமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

தினேஷ் மாஸ்டருக்கு ரஜினி பாராட்டு: படத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களை இணைத்து, இயக்குநர் கேட்ட லொகேஷன்களை ஏற்பாடு செய்துக் கொடுத்த தயாரிப்பு தரப்பிற்கும் அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதனிடையே, வேட்டையன் படத்தில் மனசிலாயோ பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்ததற்கு காரணம் அதன் கொரியோகிராபர் தினேஷ் தான் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். எளிமையான வகையில் நடன அசைவுகளை அவர் கொடுத்துள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பாடலை எழுதிய சூப்பர் சுப்பு மற்றும் அறிவு ஆகியோருக்கும் பாடலை பாடியவர்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மாஸ் காட்டும் அனிருத் இசை: வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் நான்காவது முறையாக கூட்டணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் அனிருத். இந்த படத்தில் அடுத்தடுத்து இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இரண்டுமே சூப்பர் ஹிட் அடித்துள்ளன. அதிகமான வியூசையும் பெற்று வருகின்றன. இந்த இரு பாடல்களில் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான மனசிலாயோ பாடல் மிகப்பெரிய ஹிட்டை கொடுத்துள்ளது. இந்த பாடலில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியருடன் இணைந்து அனிருத்தும் ஆட்டம் போட்டுள்ளார். ரஜினி மற்றும் மஞ்சுவாரியரின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் இந்த பாடலில் அமைந்துள்ளது.

மஞ்சு வாரியர் உற்சாகம்: இந்தப் பாடல் இப்படியொரு வரவேற்பை தனக்கு பெற்று தரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்று ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் மஞ்சு வாரியர் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார். இந்த பாடலுக்கு மிகவும் சிறப்பாக தினேஷ் மாஸ்டர் கொரியோகிராப் செய்துள்ளதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வரும் சூழலில் நடிகர் ரஜினிகாந்தும் அதை தற்போதைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அடுத்தடுத்து முன்னணி இளம் இயக்குனர்களுடன் இணைந்து படங்களை கொடுத்து வரும் ரஜினிகாந்திற்கு கடந்த ஆண்டில் ஜெயிலர் படம் சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்ததாக வேட்டையன் படமும் சூப்பர் ஹிட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X