Nelson Dilipkumar: ஜெயிலர் படம் பார்த்துவிட்டு பாராட்டிய ரஜினி.. நெல்சன் கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை தொடர்ந்து கடந்த 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ஜெயிலர் படம்.

பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை தொடர்ந்து ஜெயிலர் படத்தை ரசிகர்கள் விரும்பும் வகையில் கொடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார்.

Actor Rajinikanth hails Nelson after watching Jailer movie

இந்தப் படத்தின் வெற்றியை தற்போது சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஜெயிலர் படத்தின் நன்றி அறிவிப்பு மீட்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் அவருக்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுத் தந்தது. அண்ணன் -தங்கை சென்டிமெண்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படத்தில் அவருடன் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி என நட்சத்திர பட்டாளமே இணைந்திருந்தது. படத்தை இயக்கியிருந்தார் சிவா. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.

Actor Rajinikanth hails Nelson after watching Jailer movie

ஜெயிலர் படத்தையும் சன் பிச்கர்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கடந்த 10ம் தேதி ஜெயிலர் படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மாஸ் கலெக்ஷனை பெற்றுள்ளது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக நடித்திருந்தார் ரஜினிகாந்த். படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால், வசந்த்ரவி உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். படம் ஆக்ஷன் என்டர்டெயினராக ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில் கடந்த ஒரே வாரத்தில் படம் 375 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்த கலெக்ஷன்ஸ் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்வில் பங்கேற்ற இயக்குநர் நெல்சன் திலீப்குமார், ரஜினி குறித்தும் ஜெயிலர் படம் குறித்தும் பகிர்ந்துக் கொண்டார்.

Actor Rajinikanth hails Nelson after watching Jailer movie

படத்தின் ரிலீசுக்கு 3 தினங்கள் முன்னதாக ஜெயிலர் படத்தை ரஜினிகாந்த் முழுமையாக பார்த்ததாகவும், இதையடுத்து, படம் அவர் நினைத்தது போல வந்துள்ளதா என்று தான் கேட்டதாகவும் நெல்சன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரஜினிகாந்த் உற்சாகமாக, தான் நினைத்ததை காட்டிலும் 10 மடங்கு சிறப்பாக படம் வந்துள்ளதாக தெரிவித்ததாகவும் நெல்சன் கூறியுள்ளார். சூப்பர்ஸ்டாரின் இந்த பாராட்டுதலை அடுத்தே, படம் குறித்து தான் முழுமையாக திருப்தி அடைந்ததாகவும் நெல்சன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் நெல்சன் திலீப்குமார், சுனில், மிர்ணா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். ஜெயிலர் படம் சர்வதேச அளவில் மிகவும் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வசூல் 400 கோடி ரூபாய்களை கடந்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படம் 375 கோடி ரூபாய் கலெக்ஷனை பெற்றுள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரஜினியின் கடந்த சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜெயிலர் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X