சூப்பர்ஸ்டாரை சந்தித்த பார்த்திபன்.. பாராட்டுக் கடிதம் கொடுத்த ரஜினி!

சென்னை : நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனின் இரவின் நிழல் படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுக்களை பெற்றுள்ளது.

முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையை இந்தப் படம் பெற்றுள்ளது.

இந்நிலையில் பார்த்திபனை நேரில் வரவழைத்து தனது பாராட்டுக்களை நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சிறப்பான இயக்குநர்

சிறப்பான இயக்குநர்

கோலிவுட்டின் சிறப்பான நடிகர் மற்றும் இயக்குநர் என்ற பெருமையை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறார் பார்த்திபன். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் தொடர்ந்து அடுத்தடுத்த படங்கள் வெளியான வண்ணம் உள்ளன. சமீபத்தில் இவரது இரவின் நிழல் படம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது.

 முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம்

முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம்

முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் என்ற பெருமையை இந்தப் படம் தட்டிச் சென்றுள்ளது. ஆஸ்கார் மேடையில்கூட இந்தப் படம் ஒளிபரப்பப்பட்டு சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள நிலையில், படத்திற்கு மேலும் சிறப்பு சேர்ந்துள்ளது.

ரஜினிகாந்த் பாராட்டு

ரஜினிகாந்த் பாராட்டு

இந்தப் படத்தை இயக்குநர் பார்த்திபனே தயாரித்துள்ள நிலையில், படம் தற்போது வசூல்மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்திற்கான ஒரு போட்டியையும் பார்த்திபன் அறிவித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், பார்த்திபனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினி -பார்த்திபன் சந்திப்பு

ரஜினி -பார்த்திபன் சந்திப்பு

இன்றைய தினம் ரஜினியை அவரது போயஸ் கார்டன் இல்லத்தின் நேரில் சென்று சந்தித்தார் பார்த்திபன். அவரது இரவின் நிழல், அதனை இயக்கி நடித்த பார்த்திபன், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன் ஆகியோருக்கும் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாராட்டுக் கடிதம்

மேலும் தன்னுடைய லெட்டர் பேடில், தன்னுடைய கைப்பட பாராட்டுக் கடிதம் எழுதி கையெழுத்திட்டு அதை பார்த்திபனுக்கு கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் பார்த்திபனின் கேரக்டர் குறித்தும் ரஜினி கேட்டறிந்துள்ளார். இதனால் மிகுந்த உற்சாகமடைந்துள்ளார் பார்த்திபன்.

ரஜினியின் பணிவு

ரஜினியின் பணிவு

இருவரும் இணைந்து அதிகமான விஷயங்கள் குறித்து விவாதித்ததாகவும் பார்த்திபன் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை கார் வரை வந்து வழியனுப்பி வைத்த ரஜினியின் பண்பும் பணிவும் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் எவ்வளவு பெரிய சூப்பர்ஸ்டார் இத்தகைய பணிவுடன் நடந்துக் கொண்டது குறித்தும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X