கோல்டன் க்ளோப் விருது.. ராஜமௌலி-கீரவாணிக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

சென்னை : நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த படம் ஆர்ஆர்ஆர்.

இந்தப் படம் சர்வதேச அளவில் அனைவரையும் கவர்ந்த நிலையில், சர்வதேச அளவில் பல விருதுகளையும் பெற்று வருகிறது.

தற்போது ஆஸ்கார் விருதுக்கும் இந்தப் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும் கோல்டன் க்ளோப் விருதையும் கைப்பற்றியுள்ளது.

ஆர்ஆர்ஆர் படம்

ஆர்ஆர்ஆர் படம்

பிரபல தெலுங்குப்பட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சுதந்திர காலக்கட்டத்தை மையமாக கொண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி ரிலீசான இந்தப் படம் சர்வதேச அளவில் அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.

 வசூல் மழை பொழிந்த ஆர்ஆர்ஆர்

வசூல் மழை பொழிந்த ஆர்ஆர்ஆர்

இந்தப் படம் சர்வதேச அளவில் 1200 கோடி ரூபாய் வசூலை தாண்டி வசூலித்த நிலையில், விமர்சன ரீதியாகவும் சிறப்பாக அமைந்தது. ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்த இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது. தற்போது ஆஸ்கார் விருதுக்கு இந்தப் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

நாட்டு நாட்டு பாடல்

நாட்டு நாட்டு பாடல்

மேலும் கோல்டன் க்ளோப் விருதையும் இந்தப் படத்தின் நாட்டு நாட்டு பாடல் பெற்றுள்ளது. இதையடுத்து படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெருமைக்குரிய இந்த விருதை பெற்றுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் படத்தின் இயக்குநர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, படத்தின் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் தங்களது குடும்பத்தினருடன் கலந்துக் கொண்டனர்.

கோல்டன் க்ளோப் விருது

கோல்டன் க்ளோப் விருது

கோல்டன் க்ளோப் விருதை இந்தப் படத்தின் பாடல் பெற்றுள்ள நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். பிரபல இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர் ரஹ்மான், பிரபல தெலுங்குப்பட நாயகன் மகேஷ்பாபு, ஆலியா பட், சல்மான் கான் உள்ளிட்டவர்கள் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.

ரஜினிகாந்த் வாழ்த்து

ரஜினிகாந்த் வாழ்த்து

இதனிடையே தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் படக்குழுவினருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்திய சினிமாவிற்கு கோல்டன் க்ளோப் விருதை கொண்டு வந்து பெருமை கொள்ள செய்ததற்கு ஆர்ஆர்ஆர் படக்குழுவினருக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் படத்தின் இயக்குநர் ராஜமௌலி மற்றும் இசையமைப்பாளர் கீரவாணிக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X