உங்கள் குடும்பத்தினருக்கு எப்போதும் உங்கள் சிந்தனைதான்: வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு ரஜினி வேண்டுகோள்
சென்னை: வெளி நாடு வாழ் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸால் உலகமே முடங்கி போயுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல நாடுகளில் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல நாடுகளில் இருந்து தமிழர்கள் உட்பட இந்தியாவை சேர்ந்த தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் என பலர் மீட்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடு வாழ் தமிழர்கள்
இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வெளிநாடுகளில் வாழும் தமிழக மக்களுக்கு இந்த புதிய ஆண்டு ஒரு இனிதான ஆண்டாக அமைய வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

உங்களை பற்றிதான் சிந்தனை
கொரோனா வைரஸால் உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்தியாவோ தமிழ்நாடோ விதிவிலக்கல்ல. உங்களை பிரிந்து வாழும் உங்கள் உறவினர், உங்கள் குடும்பத்தினருக்கு சதா நேரமும் உங்களை பற்றிதான் சிந்தனை. உங்களை பற்றிதான் கவலை.

மிகப்பெரிய பரிசு
நீங்கள் எந்த நாட்டில் வசிக்கிறீர்களோ, அந்த நாட்டு அரசு என்ன கட்டுப்பாடுகள் விதிக்கிறார்களோ, அதை நீங்கள் தவறாமல் கடைப்பிடித்து உங்களை நீங்கள் காத்துக்கொள்ளுங்கள். இதுதான் உங்கள் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் இந்த ஆண்டின் மிகப் பெரிய பரிசு.
இதுவும் கடந்து போகும்
நலமுடன் வாழுங்கள்.. கவலைப்படாதீங்க.. இதுவும் கடந்து போகும்.. இவ்வாறு வீடியோ மூலம் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். காலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இதுவும் கடந்து போகும் என்றும் மக்கள் அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என டிவிட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











