Rajinikanth: அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகும் கூலி படம்.. பிட்னசை ஏற்றிய ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள கூலி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் பிரமோ ஆகியவை முன்னதாக வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங் இம்மாதம் 10ம் தேதியே துவங்க உள்ளதாக கூறப்பட்டிருந்தது.

ரஜினியின் வேட்டையன் படத்தின் கமிட்மெண்டை இன்னும் அவர் பூர்த்தி செய்யாத நிலையில் அந்த படத்தின் டப்பிங் வேலைகள் உள்ளிட்டவற்றை இன்னும் சில தினங்களில் நிறைவு செய்துவிட்டு கூலி படத்தின் ஷூட்டிங்கில் முழுமூச்சுடன் அவர் பங்கேற்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rajinikanth Coolie movie Lokesh kanagaraj tamil cinema

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த ஏப்ரல் மாதத்திலேயே ஷூட்டிங் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் மீதம் இருந்ததால் இந்த படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதத்திற்கு லோகேஷ் கனகராஜ் தள்ளி வைத்திருந்தார். படத்தின் சூட்டிங் ஜூன் மாதம் 10ம் தேதி துவங்க உள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த். அந்த படத்தின் டப்பிங் வேலைகளை இன்னும் நிறைவு செய்யாததால் இன்னும் சில தினங்களில் அந்த வேலையையும் முடித்துவிட்டு முழுமூச்சில் கூலி படத்தின் ஷூட்டிங் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தள்ளிப்போன கூலி பட சூட்டிங்: இதனால் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் கூலி படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் அதிரடி ஆக்சன் காட்சிகளுடன் இதுவரை இல்லாத வகையில் ரஜினியை மாஸாக காட்டும் வகையில் அமையவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். படத்தில் நெகட்டிவ் ஷேடுடன் ரஜினிகாந்த் நடிக்க உள்ள சூழலில் பீரியட் ஆக்சன் படமாக இந்த படம் உருவாக உள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக தன்னுடைய பிட்னஸை மேலும் கூட்டியுள்ளார் ரஜினிகாந்த்.

பிட்னசை ஏற்றிய ரஜினி: சமீபத்தில் வெளியான ரஜினிகாந்தின் புகைப்படத்தில் அவரது பைசெப்ஸ் தாறுமாறாக காணப்பட்டதை ரசிகர்கள் கண்டுபிடித்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். தன்னுடைய படங்களில் அதிகமான ஆக்சன் காட்சிகளை வைப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ரஜினிகாந்த். ஆனால் கூலி படத்தில் மேலும் அதிகமான ஆக்ஷன் காட்சிகளில் அவர் நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்திற்காக அவர் தன்னுடைய உடல் எடையை கூட்டி உள்ளதாக தெரிகிறது. கூலி படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ள சூழலில் முன்னதாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் ப்ரோமோ வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது.

டைட்டில் பிரமோ: இந்த படத்தில் ரஜினிகாந்தின் லுக் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் லியோ படத்தை கொடுத்திருந்த லோகேஷ் கனகராஜ், அந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு தன்னுடைய ஷூட்டிங்கை துவங்கினார். இதனால் மிகப்பெரிய அழுத்தத்திற்கு தான் உள்ளானதாகவும் அதனால்தான் படத்தின் இரண்டாவது பாதியில் அதிகமான கவனத்தை செலுத்த முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுபோன்ற எந்த கமிட்மெண்ட்டும் இல்லாமல் சுதந்திரமாக கூலி படத்தை இயக்க உள்ளதாகவும் அடுத்த ஆண்டில் கோடை கொண்டாட்டமாக இந்த படம் வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நடிகர் -நடிகைகள்: இந்நிலையில் ரஜினிக்கு ஜெயிலர் படம் போல மற்றும் ஒரு அதிரி புதிரி வெற்றியை கூலி படம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் சூழலில் படம் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்து விரைவில் லோகேஷ் கனகராஜ் அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படம் பான் இந்தியா படமாக உருவாக உள்ள சூழலில் படத்தில் மற்ற மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்களும் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X