Rajinikanth: இமயமலையில் ரஜினிகாந்த்.. அடுத்தடுத்து வெளியான புகைப்படங்கள்.. வீடியோ!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் நேற்றைய தினம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்ற ரஜினிகாந்த், ரிலீசின்போது சென்னையில் இல்லை.

மாறாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

Actor Rajinikanth is in his spiritual journey to Himalayas

இமயமலையில் ரஜினிகாந்த் - வெளியான புகைப்படங்கள்: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை கொடுத்த நிலையில், அவரது ஜெயிலர் படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ள ஜெயிலர் ரசிகர்களுக்கு உற்சாகமான என்டர்டெயின்மெண்ட் படமாக அமைந்துள்ளது. பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள இந்தப்படம் ரஜினிக்கு மட்டுமில்லாமல் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கும் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது.

முதல் நாளிலேயே சர்வதேச அளவில் சிறப்பான கலெக்ஷனை ஜெயிலர் படம் பெற்றுள்ளது. தொடர்ந்து ரசிகர்கள் இநத்ப் படத்தை கொண்டாடிவரும் நிலையில், கண்டிப்பாக வசூலில் ஜெயிலர் மிகப்பெரிய சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி கடந்த மாதம் 28ம் தேதி சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரஜினிகாந்த், பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார்.

மேலும் குட்டிக்கதை ஒன்றை சொல்லி அரங்கத்தை மட்டுமில்லாமல் கோலிவுட்டையே அதிர வைத்தார். சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கான மல்லுக்கட்டலாக அந்த பேச்சு அமைந்ததாக பல விமர்சகர்களும் தங்களுடைய கருத்தை பதிவு செய்தனர். பட்டமும் பதவியும் ஒரே நபரிடம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினர். ஆனாலும் இந்த சர்ச்சை தற்போது வரையில் தொடர்ந்து வருகிறது. நேந்றைய தினம் ஜெயிலர் படத்தின் ரிலீசின் போதும் ரசிகர்களிடையே இந்த சர்ச்சை எதிரொலித்தது.

இந்நிலையில் படத்தின் ரிலீசை சென்னையில் இருந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பங்கேற்காமல், இமயமலைக்கு இரு தினங்களுக்கு முன்பு புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த். அவர் வழக்கமாக தன்னுடைய படங்களின் ரிலீசின்போது இவ்வாறு செல்வது வழக்கம் என்றாலும், கடந்த இரு வருடங்களாக உடல்நிலை காரணமாக அவர் இத்தகைய பயணங்களை தவிர்த்து வந்தார். இந்நிலையில் தற்போது இமயமலை பயணத்தை அவர் மீண்டும் துவங்கியுள்ளார்.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து இந்த வயதிலும் தலைவர் நிரந்தரம் என்பதை ரசிகர்களுக்கு உணர்த்தியுள்ளார் ரஜினிகாந்த். ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் உள்ளாகியுள்ளார். இந்த ஹேஷ்டேக் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்தது. இந்நிலையில் உலகமே கொண்டாடிவரும் ரஜினி தன்னுடைய கொண்டாட்டத்தை தேடி இமயமலைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் சக நண்பர்களுடன் ஆன்மீகவாதிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் ஆக்கிரமித்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X