Jailer: கேரளா‌வி‌ல் அதிரடி காட்டும் jailer.. திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சி!

சென்னை: ரஜனியின் jailer படம் சர்வதேச அளவில் அதிரடி காட்டி வருகிறது.

சர்வதேச அளவில் வெளியான திரையரங்குகளில் எல்லாம் வசூல் மழை பெய்து வருகிறது.

Actor Rajanikanth jailer movie collects more than 40 crore rupees in kerala in just 9 days

இந்திய அளவில் வெளியான அனைத்து மொழியில் சிறப்பாக வசூல் செய்து வருகிறது.

கேரளாவில் jailer படம் அதிரடி வசூல்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான jailer படம் வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த படம் கடந்த 10 நாட்களில் 400 கோடி ரூபாய்களை கடந்துள்ளது. ரசிகர்களின் ஆர்ப்பரிக்கும் ஆதரவுடன் வெற்றி நடை போட்டு வருகிறது. தற்போது வார இறுதி நாட்களை ஒட்டி இந்த வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழியில் இந்த படம் கடந்த சில நாட்களுக்கு முன்பு jailer ரிலீஸ் ஆனது. இந்நிலையில் படம் அனைத்து மொழி ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்தது. அனைத்து தரப்பு ரசிகர்களும் படத்தை வெற்றி படமாக ஆக்கியுள்ளது சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேரளாவில் கடந்த 9 நாட்களில் படம் சிறப்பாக வசூல் செய்து உள்ளது. கேரள சூப்பர் ஸ்டார் moganlal இந்த படத்தில் Mathew என்ற கேரக்டர் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். இவரது கேரக்டர் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்து இருந்தார். இதனால் jailer கேரள ரசிகர்கள் இடையே வசூல் சாதனை செய்துள்ளது.

கடந்த 9 நாட்களில் கேரளாவின் பல திரையரங்குகளில் வெளியான jailer படம் 40 கோடி ரூபாய்களை வசூல் செய்துள்ளது. இந்த வசூல் இனி வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் வெளியான திரையரங்குகளின் உரிமையாளர்கள் இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படம் தற்போது விக்ரம் படத்தின் மொத்த வசூலை பீட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் 10 நாட்களை கடந்துள்ளது jailer படம். படத்தில் இயல்பான மற்றும் அதிரடி சரவெடி ரஜினியை பார்க்க முடிகிறது. தன்னுடைய மகனை மீட்பதற்காக அதிரடி காட்டும் ரஜினிக்கு ரசிகர்கள் தொடர்ந்து வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இதையடுத்து படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X