திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள்.. எந்த புயல் அடித்தாலும் தாங்கி நிற்பார்கள்.. யாரை சொல்றாரு ரஜினி?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. அடுத்தடுத்த படங்களின் சூட்டிங்கில் பிஸியாக நடித்து வரும் ரஜினிகாந்த் பொது நிகழ்ச்சிகளிலும் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார்.

அந்த வகையில் கலைஞர் எனும் தாய் என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ரஜினிகாந்த், திமுகவினர் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான தனது நினைவுகளை பகிரும்வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

Rajinikanth tamil cinema

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்/ தற்போது கூலி படத்தின் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். முன்னதாக இந்தப் படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் நடத்தப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, வரும் அக்டோபர் 10ம் தேதி ரஜினிகாந்தின் வேட்டையன் படமும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப்படத்தை டிஜே ஞானவேல் இயக்கியுள்ளார். போலி என்கவுண்டருக்கு எதிரான இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகியுள்ளது.

கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழா: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதுடன் பொது நிகழ்ச்சிகளிலும் தன்னை சிறப்பாக ஈடுபடுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது கலைஞருடனான தனது நினைவுகளை பகிரும்வகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு எழுதியுள்ள கலைஞர் எனும் தாய் புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகத்தை வெளியிட, நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

திமுகவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு: நிகழ்ச்சியில் திமுகவினரின் செயல்பாடுகளை ரஜினிகாந்த் பாராட்டி பேசினார். குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்தார். கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென ஒரு பாணியை உதயநிதி ஸ்டாலின் உருவாக்கியுள்ளதாக ரஜினிகாந்த் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய ரஜினிகாந்த், திமுகவினர் ஆலமரம் போன்றவர்கள் என்றும் அவர்கள் எந்தப்புயல் அடித்தாலும் தாங்குவார்கள் என்றும் சுட்டிக் காட்டி பேசினார். இதனால் அவர் தன்னுடைய பேச்சில் புயல் என யாரை குறிப்பிடுகிறார் என்பது குறித்து ரசிகர்கள் தங்களுக்குள் கேள்விகளையும் எழுப்பி தெளிவையும் பெற்றுள்ளனர்.

ப்ளூ சட்டை மாறன் பதிவு: இதனிடையே, ரஜினிகாந்தின் இந்த பேச்சை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ப்ளூ சட்டை மாறன் பதிவிட்டுள்ளார். மேலும் அடுத்தடுத்து இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசிய பேச்சுக்களையும் அவர் பதிவிட்டுள்ளார். எந்தமாதிரியான விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக எடுததுக் கொண்டு கையாண்டவர் கலைஞர் என்று கூறியுள்ள அவர், பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் கூடாது என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.தொடர்ந்து அரசியல் பேசினால் மிகவும் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X