லைகாவுடன் அடுத்தடுத்து இரண்டு படங்களில் கை கோர்க்கும் ரஜினி.. விரைவில் அறிவிப்பு?
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் லீக்காகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக காணப்படுகிறார். இவரது அபூர்வ ராகங்கள் துவங்கி தற்போது அண்ணாத்த வரை சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார். இந்தப் படங்களில் அவர் தன்னுடைய ஸ்டைல், ஆக்ஷன் உள்ளிட்ட கமர்ஷியல் தன்மைகளுக்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளார்.

ரசிகர்கள் கொண்டாட்டம்
ரஜினியின் படங்கள் கொடுத்த உற்சாகத்தையடுத்து அவருக்கு சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து ரசிகர்கள் கொண்டாடினர். தொடர்ந்து தற்போது 168 படங்களில் நடித்து முடித்துவிட்டார். இவரது பல படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன. சர்வதேச அளவில் இவருக்கு அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

சர்வதேச அளவில் ரசிகர்கள்
இதில் தமிழர்கள் மட்டுமில்லாமல், ஜப்பானியர்கள், சீனர்கள், மலேசியர்கள் என மற்ற நாடுகளின் ரசிகர்களும் இணைந்துள்ளனர். சமீபத்தில் அண்ணாத்த படத்தின் ரிலீசின்போதும் இந்த நாடுகளின் ரசிகர்களின் வீடியோக்கள் சமூக வலைதங்களில் பகிரப்பட்டன.

ஜெயிலர் படத்தில் ரஜினி
தற்போது நெல்சன் திலீக்குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது. பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு இந்த சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் நிலையில், முழுமூச்சில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

லைகாவுடன் இணையும் ரஜினி?
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் தனது 170 மற்றும் 171வது படங்களில் லைகா நிறுவனத்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் படம் கொடுத்த பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து இந்தப் படங்களில் லைகா கவனம் செலுத்தவுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
இதில் தலைவர் 170 படத்தை சிபி சக்ரவர்த்தியும் தலைவர் 171 படத்தை தேசிங்கு பெரியசாமியும் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி அடுத்தடுத்த இயக்குநர்களின் இயக்கங்களில் நடிக்கவுள்ளதாக அடிக்கடி அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. இந்த பட்டியலில் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்டோரும் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











