Rajinikanth wishes Kangana: கங்கணா ரனாவத் சூட்டிங்கில் பங்கேற்ற ரஜினிகாந்த்.. ஹீரோ யார் தெரியுமா?

சென்னை: பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வந்துக் கொண்டிருக்கிறார் நடிகை கங்கணா ரனாவத்.

தமிழில் தாம்தூம், தலைவி, சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்துள்ள கங்கணா ரனாவத் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

Actor Rajinikanth Joins Kangana ranawats new movie with Madhavan and wished the crew

இந்நிலையில் பிரபல இயக்குநர் ஏஎல் விஜய்யின் அடுத்தப் படத்தில் கங்கணா ரனாவத் கமிட்டாகியுள்ளார். முன்னதாக விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்திருந்தார்.

நடிகை கங்கணா ரனாவத்: பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம்வந்துக் கொண்டிருப்பவர் நடிகை கங்கணா ரனாவத். பல அதிரடியான படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளவர். தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்துள்ள இவர் சமீபத்தில் தலைவி மற்றும் சந்திரமுகி 2 படங்களிலும் நடித்து ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார். சந்திரமுகி 2 படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் கங்கணாவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்றது.

இயக்குநர் ஏஎல் விஜய்: முன்னதாக ஏஎல் விஜய் இயக்கத்தில் கங்கணா நடித்திருந்த தலைவி படமும் சிறப்பாக அமைந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு வெளியான இந்தப் படம் சிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக மீண்டும் ஏஎல் விஜய் இயக்கத்திலேயே தற்போது இணைந்துள்ளார் கங்கணா ரனாவத். இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க கமிட்டாகியுள்ளார்.
நடிகர் மாதவன்: மேலும் இந்தப் படத்தில் கங்கணாவிற்கு ஜோடியாக நடிகர் மாதவன் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் பூஜை இன்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்களில் துவங்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஏஎல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் சாப்டர் 1 என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் அடுத்தப் படத்தில் கமிட்டாகியுள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து: இந்நிலையில் இந்தப் படத்தின் பூஜையில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டு, படக்குழுவினருக்கும் கங்கணா ரனாவத்திற்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் மாதவனுடன் இந்தப் படத்தில் கங்கணா ரனாவத் இணைந்துள்ளார். சைக்காலாஜிக்கல் த்ரில்லராக படம் உருவாகவுள்ளதாகவும் படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் பூஜைக்காக சென்னை வந்த கங்கணா ரனாவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
சந்திரமுகி 2 படம்: சந்திரமுகி 2 படத்தில் கங்கணா நடித்திருந்த நிலையில், இந்தப் படம் தமிழில் இவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தப் படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்நிலையில் மீண்டும் ஏஎல் விஜய் இயக்கத்திலேயே கங்கணா ரனாவத் இணைந்துள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உணர்வுபூர்வமான படங்களை கொடுத்துவரும் ஏஎல் விஜய் இந்தப் படத்தில் சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானரில் படமியக்கவுள்ளது எதிர்பார்ப்புகளை எகிற செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X