Rajinikanth :லால் சலாம் படத்தோட அடுத்தக்கட்ட சூட்டிங்.. அப்டேட் கொடுத்த ஐஸ்வர்யா ரஜினி!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. சில பேட்ச் வேலைகள் மட்டும் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய மூத்த மகளின் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார் ரஜினிகாந்த்.

இந்தப் படத்தின் முதல் கட்ட சூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்தக்கட்ட சூட்டிங் குறித்து ஐஸ்வர்யா ரஜினி அப்டேட் தெரிவித்துள்ளார்.

Actor rajinikanth joins Laal salam movie shooting 2nd scehdule soon

லால் சலாம் படத்தின் அப்டேட் : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை முடித்துக் கொடுத்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. சில பேட்ச் வேலைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இன்னும் சில தினங்களில் இந்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் ஆகஸ்ட் 11ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ள நிலையில், அந்தப் படத்துடன் ரஜினியின் ஜெயிலர் படமும் மோதவுள்ளது கோலிவுட்டில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் ரசிகராக தன்னை வெளிப்படுத்திவரும் சிவகார்த்திகேயன், அவருடைய படத்துடன் மோதவுள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தூண்டியுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்தே கோலிவுட்டின் எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகவுள்ளன.

ஜெயிலர் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 170 படத்திற்காக இணையவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாத இறுதியில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் முன்தயாரிப்புப் பணிகளில் ஞானவேல் தற்போது மும்முரமாக ஈடுபட்டுள்ளார். முன்னதாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் அவர் இணையவுள்ளார்.

Actor rajinikanth joins Laal salam movie shooting 2nd scehdule soon

இந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது முடித்துள்ளதாக அப்டேட் தெரிவித்துள்ளார். மேலும் இதை கொண்டாடும் வகையில் படக்குழுவினருக்கு அவர் விருந்தும் அளித்துள்ளார். பல புகைப்படங்களையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இதனிடையே இந்தப்படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாகவும் அதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் முஸ்லிம் பெரியவராக ரஜினி நடிக்கவுள்ளதாகவும் அதற்காக அவர் நீண்ட தாடி மற்றும் மீசை வளர்த்து வருவதாகவும் முன்னதாக அப்டேட் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைவில் ரஜினி, படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X