அண்ணாத்த படத்தை முடித்த கையோடு அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்.. காரணம் இதுதான்!
சென்னை: அண்ணாத்த படத்தை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என நான்கு நடிகைகள் நடிக்கின்றனர்.
சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ், வேல ராமமூர்த்தி, ஜார்ஜ் மரியான், ஜெகபதி பாபு என பெரும் நடிகர் பட்டாளமும் இப்படத்தில் நடித்து வருகிறது.

ஹைத்ராபாத்தில் ஷூட்
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே படப்பிடிப்பின் போது நடிகர் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

கொரோனா சோதனைகள்
இதனால் பலத்த கட்டுப்பாடுகளுடனும் பாதுகாப்புடனும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் படப்பிடிப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையில்லாமல் வெளியாட்கள் படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களில் நிறைவு
இந்நிலையில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணாத்த படத்தின் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என தெரிகிறது.

அமெரிக்கா செல்லும் ரஜினி
படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பவுள்ளார். அதனை தொடர்ந்து தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு டப்பிங் பேசவுள்ளார் ரஜினிகாந்த். டப்பிங் பணிகள் முடிந்த உடனேயே வரும் ஜூன் மாதம் மருத்துவப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video

ரஜினியும் அமெரிக்கா பயணம்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, அவரது கணவர் நடிகர் தனுஷ், பிள்ளைகள் என குடும்பத்துடன் அமெரிக்காவில் தான் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் அங்கு இருக்கும் போது நடிகர் ரஜினிகாந்தும் அமெரிக்கா செல்லவுள்ளார்.


Click it and Unblock the Notifications











