மருத்துவ பரிசோதனை... அதிகாலையில் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார் ரஜினிகாந்த்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக இன்று அதிகாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஹைத்ராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அப்போதே ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாக தகவல் வெளியானது.

ஷூட்டிங் நிறைவு
ஆனால் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிலுவையில் இருந்ததால் அதனை முடித்துவிட்டு செல்வார் என கூறப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் அண்ணாத்த படத்தின் மூன்றாவது ஷெட்டியூல் ஷூட்டிங்கை நிறைவு செய்தார் நடிகர் ரஜினிகாந்த்.

விமான போக்குவரத்துக்கு தடை
அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று அதிகாலை சென்னையில் இருந்து மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

தனி விமானம் மூலம்
இதனால் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார் ரஜினி. மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து ரஜினிகாந்த் இன்று காலை தனது மனைவி லதாவுடன் சென்னை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்காவில் 3 வாரங்கள்
அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளும் ரஜினிகாந்த் 3 வாரங்கள் தங்கி ஓய்வெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது சிறுநீரிக மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில்செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











