ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்.. 34 ஆண்டுகளுக்கு பிறகு கூட்டணி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் அவரது ஜெயிலர் படமும் இந்த ஆண்டில் அடுத்தடுத்து வெளியான லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்களும் கவனத்தை பெற்ற நிலையில் கலவையான விமர்சனங்களையும் பெற்றன.
இதனிடையே அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்திலேயே ஜெயிலர் 2 படத்திலும் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரு படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் நிலையில், அடுத்தடுத்த அதிரடிகளுக்காக அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் அதிரிபுதிரி வெற்றியடைந்த நிலையில், அடுத்ததாக அவரது நடிப்பில் லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்கள் ரிலீசாகி கவனம் பெற்றுள்ளன. இவற்றில் வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் குறை வைக்கவில்லை. படம் ரசிகர்களை கவர்ந்து ஓடிடியிலும் மாஸ் காட்டி வருகிறது. இந்நிலையில் அடுத்ததாக வேட்டையன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
கூலி படம்: இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. பிரம்மாண்டமான செட்களில் இந்தப்படத்தின் சூட்டிங்கை அடுத்தடுத்து எடுத்து வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படத்தை தொடர்ந்து மீண்டும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் தற்போது நெல்சன் திலீப்குமார் இயங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த இரு படங்களையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில், அடுத்தடுத்த அதிரடிகளுக்காக சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த் -மணிரத்னம் கூட்டணி: இதனிடையே ரஜினிகாந்த் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 1991ம் ஆண்டில் இவர்கள் கூட்டணியில் வெளியான தளபதி படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. ஆனால் இந்தக் கூட்டணி ஏனோ தொடர்ந்து இணையவில்லை. இந்நிலையில் 34 ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மணிரத்னம் தன்னுடைய மெட்ராஸ் டாக்கீசுடன் இணைந்து முன்னணி நிறுவனத்துடன் இந்தப் படத்திற்காக கைக்கோர்க்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படம் குறித்து ரஜினிகாந்த் பிறந்தநாளின்போது அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைவர் 173 படம்: தலைவர் 173 என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப்படம் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்குள்ளாக நெல்சன் படத்தை ரஜினிகாந்த் நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கமல்ஹாசனுடன் மணிரத்னம் இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் ரிலீசும் மேற்கொள்ளப்பட்டுவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மணிரத்னம் -கமல்ஹாசன் கூட்டணியும் நாயகன் படத்தை தொடர்ந்து 37ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடந்து வருகிறது. முன்னதாக இவர்களின் காம்போவில் வெளியான நாயகன் படத்தை போலவே தக் லைஃப் படமும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் சிம்பு, திரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்க உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











