ரஜினிகாந்தை சந்தித்த ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா.. சிறப்பான தருணம் என மகிழ்ச்சி!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் சிறப்பான விஷயங்களையும் நபர்களையும் பாராட்டும் வழக்கத்தை கடைபிடித்து வருகிறார்.
சிறப்பான படங்களையும் அது சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் பாராட்டும் வழக்கத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிரபல ஸ்குவாஷ் வீராங்கனையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங்கில் உள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் கடலூரில் நடைபெற்று வருகிறது. தற்போது யோகிபாபுவுடன் காம்பினேஷன் காட்சிகளில் இவர் நடித்துள்ளார். படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் நிலையில், முன்னதாக சென்னையில் ஜெயில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

அடுத்த ஆண்டில் ரிலீசாகும் ஜெயிலர்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் இந்தப் படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் நிலையில், படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகும் என்றும் முன்னதாக மார்ச் மாதத்திற்கு படத்தின் சூட்டிங் நிறைவடையும் என்றும் தகவல்கள் வெளியாகின. விரைவில் படத்தின் அப்டேட்டை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்க்கலாம்.

திறமைகளை பாராட்டும் ரஜினி
இதனிடையே முன்னணி படங்கள், நடிகர்கள், அவர்களது சிறப்பான முயற்சிகள், சிறிய பட்ஜெட் படங்கள் என தன்னை கவரும் விஷயங்ளை தொடர்ந்து பாராட்டும் பழக்கத்தை மேற்கொண்டு வருகிறார் ரஜினிகாந்த். கோலிவுட்டின் மூத்த நடிகரான அவரிடம் பாராட்டுக்களை பெற்றதை அது தொலைபேசி வாழ்த்தாக இருந்தாலும் அதை பெருமையுடன் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.

ரஜினியை சந்தித்த ஜோஸ்னா சின்னப்பா
திரைத்துறையில் இருப்பவர்களை மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட மற்றத் துறைகளை சேர்ந்தவர்களையும் ரஜினிகாந்த் தொடர்ந்து நேரில் அழைத்தோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ பாராட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சர்வதேச ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மகிழ்ச்சியான தருணம்
இதுகுறித்து தற்போது ஜோஸ்னா சின்னப்பா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரஜினியை அவரது வீட்டில் சென்று சந்தித்துள்ள ஜோஸ்னா, இது தன்னுடைய வாழ்க்கையின் மிகச் சிறப்பான தருணம் என்று தெரிவித்துள்ளார். இந்த நாளை தான் எப்போதுமே மறக்க முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களை கவர்ந்த ரஜினி
இதுபோல இளம் சாதனைகளை வாழ்த்தும் ரஜினியின் செயல்பாடுகள் அவரது ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. நெல்சன் இயக்கத்தில் தற்போது நடித்துவரும் ரஜினி, அடுத்ததாக டான் படப்புகழ் சிபியுடன் தனது 170வது படத்தில் இணையவுள்ளார். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











