Just In
- 8 hrs ago
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்... பழிவாங்குதல்..அன்பின் காவியம்.. ‘நாகினி 5’
- 8 hrs ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 9 hrs ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 10 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
Don't Miss!
- Automobiles
ஏன் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும்? சமூக வலை தளங்களில் வைரலாகும் தமிழக அதிகாரியின் வீடியோ!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 22.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாம்…
- News
இன்றைய தேதியில் இந்தியாவில் தேர்தல் நடந்தால்.. என்டிஏ கூட்டணி 321 இடங்களை வெல்லும்.. அதிரடி சர்வே..!
- Sports
அண்ணனுக்கு ஒரு ராபின் உத்தப்பா.. "யூத்" வீரரை விலைக்கு வாங்கிய சிஎஸ்கே.. இதுதான் அந்த ஸ்பார்க்கா தல?
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தனது ஓவியங்களால் வீட்டையே மியூஸியமாக மாற்றிய ரசிகர்.. வீட்டிற்கு அழைத்து கட்டிப்பிடித்த ரஜினி!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்த போட்டோக்கள் வெளியாகி வருகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் ஆண்டுக்கு ஒரு முறை தமிழகம் முழுவதும் உள்ள தனது ரசிகர்களை மாவட்ட வாரியாக சந்தித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது சிலரை அழைத்து வீட்டில் வைத்து சந்திப்பதையும் வாடிக்கையாக கொண்டுள்ளார் ரஜினி.
தள்ளிப் போகும் டாப் நடிகரின் படம்.. சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட பிரைட் நடிகர்!

அரசியல் பிரச்சனைகள்
அந்த வகையில் அண்மையில் கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் மற்றும் கர்ப்பிணி ஆகியோரை தனது வீட்டிற்கு அழைத்து சந்தித்தார். அந்த போட்டோக்கள் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது. விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ள நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது அரசியல் பிரச்சனைகள் குறித்தும் பேசி வருகிறார்.

ஓவியர் ரசிகர்
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து நேற்று ஹஜ் கமிட்டி தலைவரை சந்தித்து பேசினார் நடிகர் ரஜினிகாந்த். இன்று இஸ்லாமிய மத குருமார்களை சந்தித்தார். இந்த நிலையில், ரஜினியின் தீவிர ரசிகரான மதுரை எல்லீஸ் நகரை சேர்ந்த ஓவியர் சுந்தர், கடந்த பல ஆண்டுகளாக தன் திறமையால் தனது வீட்டையே ரஜினியின் ஓவியத்தால் அலங்காரம் செய்து வருகிறார்.

குடும்பத்துடன் சந்திப்பு
ரஜினி பிறந்தநாளான கடந்த டிசம்பர் 12 ஆம் தேதி சுந்தர் தனது வீட்டில் வரைந்த ஓவியங்களை சமூகவலைதளங்களில் ரஜினி ரசிகர்கள் பெருமளவில் பகிர்ந்தனர். இதனையடுத்து, சுந்தரை இன்று நேரில் அழைத்து தனது பாராட்டை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். மேலும் தனது மனைவி, மகளுடன் வந்த சுந்தர், ரஜினியை சந்தித்து தான் வரைந்த ரஜினி ஓவியத்தை பரிசாக வழங்கி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
|
கட்டியணைத்த ரஜினி
ஓவியம் வரைந்த சுந்தரை ரஜினி கட்டியணைத்து பாராட்டினார் ரஜினிகாந்த். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதேபோல் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முகமது ஜக்கிரியா என்ற ரசிகரையும் வீட்டிற்கு அழைத்து கட்டியணைத்து போட்டோ எடுத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
|
வாய் பேச முடியாத
வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ரசிகரான முகமது ஜக்கிரியா ஜானி படம் முதல் கடைசியாக வெளியான தர்பார் படம் வரை ரஜினியின் படம் குறித்து பல கடிதங்களை நடிகர் ரஜினிகாந்துக்கு எழுதியிருக்கிறார். இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் இருந்து பல பதில் கடிதங்களையும் பெற்றிருக்கிறார். அந்த ரசிகரை நடிகர் ரஜினிகாந்த் இன்று நேரில் சந்தித்துள்ளார்.