Rajinikanth: லைகா மீது அதிருப்தியில் ரஜினிகாந்த்?.. இந்தியன் 2 இசை வெளியீட்டில் பங்கேற்பாரா?

சென்னை: நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், சித்தார்த், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள இந்தியன் 2 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் அதற்கான ஏற்பாடுகளில் படக்குழு தற்போது ஈடுபட்டு வருகிறது.

வரும் மே மாதம் முதல் வாரத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் மே மாதம் 16ம் தேதி படத்தின் இசை வெளியீடு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பார் என்று முன்னதாக கூறப்பட்ட சூழலில் தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Actor Rajinikanth not seems to participate in Kamal haasan s Indian 2 movie music launch

இந்தியன் 2 படம்: நடிகர் கமல்ஹாசன் -இயக்குனர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் இந்தியன் 2. இந்த படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்த சூழலில் ஒரு பாடல் மட்டும் மீதம் உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படம் வரும் ஜூன் மாதத்தில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் வரும் மே மாதம் முதல் வாரத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது கமல்ஹாசனின் அதிரடி சிங்கிளாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் மே மாதம் 16ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்தியன் 2 இசை வெளியீடு: இந்த இசை வெளியீட்டில் நடிகர் கமல்ஹாசன் சேனாபதி கேரக்டரில் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த கெட்டப்பை போடுவதற்கு அவருக்கு ஆறு மணி நேரங்கள் ஆகும் என்றும் மேலும் அந்த மேக்கப்பை தொடர்ந்து மெயின்டெயின் செய்வதற்கும் சில பல விஷயங்களை செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் நார்மல் லுக்கிலேயே இசை வெளியீட்டில் தோன்றுவார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இசை வெளியீட்டில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பாரா என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. ஆனால் இந்தியன் 2 படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் மீது நடிகர் ரஜினிகாந்த் அதிருப்தியில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

லைகாமீது ரஜினி அதிருப்தி?: முன்னதாக லால் சலாம் படத்திற்கு லைகா நிறுவனம் சிறப்பான ப்ரமோஷன்களை கொடுக்க தவறிவிட்டதாக ரஜினிகாந்திற்கு வருத்தம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தற்போது வேட்டையன் படத்திலும் சில அதிருப்திகள் ரஜினிக்கு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே இயக்குனர் ஷங்கர் இந்த இசை வெளியீட்டில் ராம்சரண் மற்றும் சிரஞ்சீவியை பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் அடுத்ததாக சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் உருவாகிவரும் கேம் சேஞ்சர் படத்திற்கும் பிரமோஷன்களை கொடுக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

16ம் தேதி இசை வெளியீடு: எதுவாக இருந்த போதிலும் வரும் 16ம் தேதி நடக்கவுள்ள இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரியவரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தியன் 2 படம் முன்னதாக ஒரே பாகமாக உருவாகவிருந்த நிலையில், தற்போது படத்தின் நீளம் கருதி, இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 என இருவேறு பாகங்களாக வெளியாகவுள்ளன. இதில் இந்தியன் 2 ஜூன் மாதத்திலும் இந்தியன் 3 படம் டிசம்பர் மாத்திலும் ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாகம் மிகப்பெரிய ஹிட்டடித்த சூழலில் இந்த இரு பாகங்களும் ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X