Rajinikanth: அயோத்தி வீதிகளில் சிங்கநடை போட்ட ரஜினிகாந்த்.. ரசிகர்கள் உற்சாகம்!
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ச்சி இன்றைய தினம் கோலாகலமாக நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக உலகெங்கிலும் இருந்து ஆயிரக்கணக்கான பிரபலங்கள் அயோத்திக்கு சென்றுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த்தும் தன்னுடைய மனைவியுடன் இந்த கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதற்காக நேற்றைய தினம் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். நேற்றைய தினம் அவர் வீட்டிலிருந்து புறப்பட்டது முதல் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியது மற்றும் அயோத்தி சென்றதுவரை அடுத்தடுத்த வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.
ஆன்மீகத்தில் அதிகமான நாட்டம் கொண்ட ரஜினிகாந்த், கடந்த சில மாதங்களுக்கு முன்பே அயோத்திக்கு சென்ற நிலையில், தற்போது கும்பாபிஷேகம் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. முன்னதாக அயோத்தியின் வீதிகளில் அவர் நடந்து சென்று கோயில் கும்பாபிஷேகம் நடக்கும் இடத்திற்கு சென்றார். அடுத்தடுத்து இதன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் ஆன்மிகத்தில் மிகந்த ஈடுபாடு கொண்டவர். இமயமலை பயணங்களுக்கு அடிக்கடி சென்று வருபவர். தன்னுடைய படங்களின் ரிலீசின்போதோ, மற்ற சிறப்பான நிகழ்வுகளின்போதோ ஆண்டுதோறும் இமயமலைக்கு பயணம் மேற்கொள்வதை வழக்கமாக கொண்ட ரஜினிகாந்த், கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவு காரணமாக இமயமலை பயணத்தை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் ரிலீசின்போது அவர் இமயமலை பயணத்தை மேற்கொண்டார். இந்த பயணத்தின்போதே அவர் அயோத்தியில் கட்டப்பட்டு வந்த ராமர் கோயிலுக்கும் விசிட் செய்திருந்தார்.
ராமர் கோயில் கும்பாபிஷேகம்: இந்நிலையில் இன்றைய தினம் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்திற்கும் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்துடன் அவர் பயணம் மேற்கொண்டார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதைபோலவே ரஜினியும் அழைக்கப்பட்டிருந்தார். இதையொட்டி நேற்றைய தினம் அவர் சென்னை விமானநிலையத்தில் இருந்து அயோத்திக்கு தன்னுடைய பயணத்தை மேற்கொண்டார். இதன் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. முன்னதாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களையும் சந்தித்து ரஜினிகாந்த் பேசினார்.
அயோத்தி சென்ற ரஜினிகாந்த்: ராமர் கோயிலுக்காக கடந்த 500 ஆண்டுகள் நடந்த போராட்டங்களை சுட்டிக் காட்டிய அவர், இன்றைய தினம் வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றைய தினம் அயோத்தி புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், இன்றைய தினம் அயோத்தி வீதிகளில் நடைபோட்டு ராமர் கோயிலின் பிராணப் பிரதிஷ்டை விழாவை நேரில் காண சென்றார். அவருக்கு முன் இருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அவருக்கு பக்கத்து இருக்கைகளில் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் அமர்ந்திருந்தனர். முன்னதாக ரஜினியை கண்ட வடநாட்டு ரசிகர்களும் வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
சிங்கநடை போட்ட ரஜினிகாந்த்: அனைவருக்கும் வணக்கம் வைத்தபடி ரஜினிகாந்த் நடந்து சென்ற வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. தன்னுடைய மனைவியுடன் ரஜினிகாந்த் அயோத்திக்கு புறப்பட்டு சென்ற நிலையில், அவரது பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவும் தன்னுடைய அப்பா தனுஷுடன் அயோத்திக்கு சென்றுள்ளனர். இதன் வீடியோக்களும் சமூகவலைதளங்களில் பகிரப்பட்டிருந்தன. நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் சச்சின், விராட் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications











