சூப்பர்ப்.. கிரியேட்டிவ் வொர்க்.. கேரள சிறுவனை பாராட்டி தள்ளிய ரஜினிகாந்த்!
சென்னை: தனது முகத்தை கியூப்களை கொண்டு உருவாக்கிய கேரள சிறுவனை பாராட்டி தள்ளியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் ரஜினிகாந்துக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
ஜப்பான், சீனா, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளிலும் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உள்ளனர்.

ஓவியங்களை வரைவது
வயது வித்தியாசம் இன்றி ஆண் பெண் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர்களில் சிலர் ரஜினியின் ஓவியங்களை கால்களால் வரைவது, பின்னர் அவற்றை அவருக்கு அனுப்புவது என இருந்து வருகின்றனர்.

கேரளாவை சேர்ந்த சிறுவன்
அந்த வகையில் கேரளாவை சேர்ந்த அத்வைத் என்ற சிறுவன் க்யூப்புகளை கொண்டு ரஜினியின் உருவத்தை அமைத்து அவரை இம்ப்ரஸ் செய்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த சிறுவன் அத்வைத் மானஷி.

க்யூப்ஸ்களை வைத்து..
இவர் கொச்சியில் உள்ள பவன்ஸ் ஆதர்ஷா வித்யாலயா பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். சிறுவன் அத்வைத் க்யூப்ஸ்களை பயன்படுத்தி புகைப்படங்களை வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அசத்திய அத்வைத்
இந்நிலையில், சிறுவன் அத்வைத் நடிகர் ரஜினிகாந்தின் உருவத்தை க்யூப்ஸ்களைப் பயன்படுத்தி அமைத்து அசத்தியுளார். அத்வைத் தான் வரைந்த ரஜினியின் க்யூப் உருவப்படத்தை தனது ட்விட்டர் பக்கக்ததிலும் ஷேர் செய்துள்ளார்.
வைரலான வீடியோ
மேலும் நான் ரஜினிகாந்த் சாரின் ரூபிக்ஸ் கியூப் மொசைக் உருவப்படம்! 300 க்யூப்ஸ்களைப் பயன்படுத்தி எவர்க்ரீன் நடிகரை வரைந்தேன். இது எனக்கு மகிழ்ச்சியையும் ஆசீர்வாதத்தையும் அளிப்பதாக உணர்கிறேன் என்றும் பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது.

சூப்பர்ப்.. கிரியேட்டிவ் வொர்க்
இந்த வீடியோ நடிகர் ரஜினிகாந்தின் பார்வைக்கும் சென்றது. சிறுவனின் திறமையை கண்டு பிரமித்த ரஜினி, ஆடியோ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் சூப்பர்ப்... கிரியேட்டிவ் வொர்க் அத்வைத்.. காட் பிளஸ் யூ லவ் யூ" என்று கூறியுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் போற்றுவேன்
நடிகர் ரஜினிகாந்த் சிறுவன் அத்வைத்துக்கு ஆடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரஜினியின் ஆடியோ மெஸேஜை பெற்ற அத்வைத், ஆடியோ மெஸேஜ் அனுப்பியதற்கு ரொம்ப நன்றி ரஜினி சார், இதை உங்களிடம் இருந்து பெற்ற பெரிய ஆசிர்வாதமாக கருதுகிறேன். இதை என் வாழ்நாள் முழுவதும் போற்றுவேன். டன்ஸ் அன்ட் டன்ஸ் ஆஃப் லவ் டூ யூ.. நன்றி சார் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











