வட சென்னை மக்களின் தாகத்தை போக்கும் ரஜினி! கெத்துதான்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வட சென்னை மக்களின் தாகத்தை போக்கும் வகையில் மக்களுக்கு குடிநீர் வழங்கி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியலுக்கு வரவுள்ளார். இதற்கான நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் கட்சி போட்டியிடவுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரஜனி கட்சியின் பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியல் பணிகள்

அரசியல் பணிகள்

அதே நேரத்தில் ரஜினிகாந்த் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி வருகிறார். இருப்பினும் அரசியல் சம்பந்தமான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 ரஜினி வழங்கும் தண்ணீர்

ரஜினி வழங்கும் தண்ணீர்

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் வகையில் மக்களுக்கு உதவி வருகிறார். சென்னையில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் தனது மன்றத்தினர் மூலமாக குடி நீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளார் ரஜினிகாந்த்.

லாரிகளில் சப்ளை

லாரிகளில் சப்ளை

தமிழகத்தின் பல பகுதிகளிலும் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் இடங்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதேபோல் வட சென்னை பகுதியிலும் மக்கள் ரஜினி மக்கள் மன்றத்தினர் லாரிகளில் குடிநீர் சப்ளை செய்து வருகின்றனர்.

ரஜினிக்கு பாராட்டு

ரஜினிக்கு பாராட்டு

ஒரு பக்கம் தமிழக அரசு தண்ணீர் பிரச்சனையை போக்க ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருகிறது. மறுபக்கம் திமுக உள்ளிட்ட கட்சிகளும் மக்களுக்கு தண்ணீர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் ரஜினியும் தனது பங்குக்கு மக்களுக்கு தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்திருப்பது மக்களின் பாராட்டை பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X