Coolie movie: நாளை துவங்கும் கூலி பட சூட்டிங்.. ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த்!
ஐதராபாத்: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாக உள்ள படம் கூலி. இந்த படத்தின் சூட்டிங் நாளைய தினம் ஐதராபாத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் அதிரடி ஆக்சன் படமாக உருவாகவுள்ள நிலையில் படத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் கேரக்டர் அமைந்துள்ளதாக லோகேஷ் கனகராஜ் முன்னதாக தனது பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங் நாளை ஐதராபாத்தில் துவங்கவுள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார். நாளைய தினம் பூஜையுடன் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், படம் அடுத்த ஆண்டு கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலி படம்: நடிகர் ரஜினிகாந்த் -லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகவுள்ள படம் கூலி. இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட சூழலில் இந்த மாதம் முதல் வாரத்தில் படத்தின் ஷூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனிடையே படத்தின் சூட்டிங் நாளைய தினம் ஐதராபாத்தில் பூஜையுடன் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணையவுள்ளனர். மற்ற நடிகர் நடிகைகள் குறித்த அப்டேட்டை விரைவில் லோகேஷ் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
ஐதராபாத் சென்ற ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் அனிருத் இசையமைக்கவுள்ளார். இதேபோல விக்ரம் படத்தில் லோகேஷுடன் இணைந்து மிரட்டியிருந்த கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சதீஸ்குமார் ஆர்ட் டைரக்டராகவும் பிலோமின் ராஜ் எடிட்டராகவும் அன்பறிவ் மாஸ்டர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்களாகவும் இணைந்துள்ளனர். படம் அதிகமான ஆக்ஷன் காட்சிகளாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அன்பறிவ் மாஸ் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கிற்காக தற்போது ரஜினிகாந்த் ஐதராபாத் புறப்பட்டு சென்றுள்ளார்.
ரஜினியின் லுக் டெஸ்ட்: முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ப்ரோமோ ஆகியவை வெளியாகி மிகப்பெரிய அளவில் மாஸ் காட்டியது. இந்த படத்தில் ரஜினிகாந்த் நெகட்டிவ் ஷேடில் நடிக்க உள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ரஜினியின் லுக் டெஸ்ட் ஓவர் என்றும் புகைப்படத்துடன் தெரிவித்திருந்தார். இதையடுத்து படத்திற்கான எதிர்பாப்பு மிகப்பெரிய அளவில் காணப்படுகிறது. தன்னுடைய முந்தைய படங்கள் போல இல்லாமல் இந்த படத்தில் போதை கலாச்சாரங்கள் ஆகியவை இடம்பெறாது என்று லோகேஷ் கனகராஜ் உறுதிப்பட கூறியிருந்தார்.

சென்னை, ஐதராபாத் சூட்டிங்: இந்நிலையில் கூலி படம் எது போன்ற கதைக்களத்தில் பயணிக்கும் என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், அந்த படத்தின் டப்பிங் வேலைகளை நிறைவு செய்யவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அவர் கூலி படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். படத்தின் அடுத்தடுத்த சூட்டிங்கை சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் மட்டுமே லோகேஷ் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











