Rajinikanth: லைகாவுடன் அடுத்தடுத்த படங்கள்... சம்பளத்தை குறைத்துக் கொண்டாரா சூப்பர்ஸ்டார்?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய மகள் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கில் ரஜினி இணையவுள்ளார்.

இந்த இரு படங்களையும் லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்த இரு படங்களில் ரஜினியின் சம்பள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

Actor Rajinikanth reduces his salary under Lyca production movies?

சம்பளத்தை குறைத்துக் கொண்ட ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான படம் அண்ணாத்த. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் படத்திற்காக நடிகர் ரஜினிகாந்த் 110 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங், சென்னை, மும்பை போன்ற இடங்களில் நடந்து முடிந்த நிலையில், தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.

லைகா தயாரிப்பில் உருவாகிவரும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கேமியோ கேரக்டரில் நடித்து வருகிறார். மொய்தீன் பாய் என்ற அந்த கேரக்டரின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும் வெளியாகி ட்ரெண்டானது. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவித்து, இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் இணையவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

Actor Rajinikanth reduces his salary under Lyca production movies?

லால் சலாம் மற்றும் ஞானவேல் உடனான இரு படங்களையும் லைகா நிறுவனமே தயாரிக்கிறது. இந்நிலையில், இந்த இரு படங்களிலும் நடிகர் ரஜினிகாந்தின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. லால் சலாம் படத்திற்காக அவர் 25 கோடி ரூபாயும் ஞானவேல் படத்திற்காக 80 கோடி ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளதாகவும் மொத்தத்தில் 105 கோடி ரூபாய் மட்டுமே இரு படங்களுக்கும் சேர்த்து சம்பளமாக பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்ணாத்த படத்திற்காக மட்டுமே 110 கோடி ரூபாய்களை சம்பளமாக பெற்ற ரஜினிகாந்த், தற்போது லைகாவிடம் லால் சலாம் மற்றும் ஞானவேல் படங்களுக்கு சேர்த்து 105 கோடி ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக வெளியாகியுள்ள இந்த செய்தி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லைகா நிறுவனத்துடனும் சுபாஸ்கரனுடனும் நல்ல புரிதலில் உள்ளார் ரஜினிகாந்த். இந்நிலையில் அவர் அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக தன்னுடைய சம்பளத்தை குறைத்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X