Actor Rajinikanth: அபுதாபியில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்.. சும்மா புயல்போல சீறி வர்றாரே!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களாக அபுதாபியில் முகாமிட்டிருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அவருக்கு கோல்டன் விசா வழங்கப்பட்ட நிலையில் அதை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த், இதற்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து மந்திருக்கும் சென்று சாமி தரிசனம் செய்திருந்தார் ரஜினிகாந்த். தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக வரும் ஜூன் மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர், லால் சலாம் படங்களை தொடர்ந்து தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ளது. படம் வரும் அக்டோபர் மாதத்தில் தீபாவளி ரிலீசாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்த மாதத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தின் சூட்டிங்கில் ரஜினிகாந்த் இணையவுள்ளார் ரஜினிகாந்த். முன்னதாக வேட்டையன் படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்த அவர், தொடர்ந்து அபுதாபி புறப்பட்டு சென்றிருந்தார்.
ரஜினிக்கு கோல்டன் விசா: அபுதாபியில் ரஜினிகாந்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா வழங்கப்பட்டிருந்தது. இதற்கு காரணமானவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள பாப்ஸ் இந்து மந்திரில் அவர் சாமி தரிசனம் செய்திருந்தார். முக்கியமான நபர்களை சந்தித்து அவர் பேசிய வீடியோக்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இந்நிலையில் தற்போது அவர் அபுதாபியில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இன்னும் சில தினங்களில் கூலி படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள சூழலில் அதற்காக ரஜினிகாந்த் தயாராகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை திரும்பிய ரஜினிகாந்த்: இன்றைய தினம் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய விமான நிலைய வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 73 வயதான ரஜினிகாந்த் இந்த வயதிலும் வீறு கொண்ட சிங்கம் போல நடந்து வருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அவர் தன்னை பார்த்து உற்சாகம் அடைந்த ரசிகர்களையும் கையசைத்து உற்சாகப்படுத்தியதையும் பார்க்க முடிந்தது. இளம் நடிகர்களே தளர்வான நடையுடன் வருவதை சுட்டிக்காட்டியுள்ள ரசிகர்கள், இந்த வயதிலும் சுறுசுறுப்புடன் மற்ற நடிகர்களுக்கு உத்வேகமாக ரஜினி செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
கூலி படத்தில் இணையும் ரஜினி: கூலி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்த சூழலில் இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவரும் கதைகளத்தில் உருவாகவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இதுவரை இல்லாத வகையில் ரஜினி இந்த படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார் என்றும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இந்த படம் ரஜினியின் கேரியரில் பெஸ்ட்டாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்காக சம்பளமாக ரஜினிகாந்த் 260 கோடி ரூபாய்களை பெற்றதாக கூறப்படும் நிலையில், அடுத்தடுத்த படங்கள் குறித்து தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











