Rajinikanth: மாலத்தீவிலிருந்து சென்னை திரும்பிய சூப்பர்ஸ்டார்.. ஸ்பீச்சுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ஜெயிலர் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தை இயக்கியுள்ளார் நெல்சன் திலீப்குமார். படத்தின் இரு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாளைய தினம் சென்னையில் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த ரஜினிகாந்த், அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

Actor Rajinikanth returns from Maldives to chennai after his vacation trip

மாலத்தீவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள இந்தப் படத்தில் ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்டவர்களும் ஜெயிலர் படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படத்தின் காவாலா மற்றும் ஹுகும் ஆகிய பாடல்கள் லிரிக் வீடியோவாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. குறிப்பாக காவாலா பாடல் சர்வதேச அளவில் பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிகமாக கவர்ந்துள்ளது. இந்தப் பாடலின் ரீல்ஸ்களை பல பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். தமன்னாவும் தன்னுடைய ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திருந்தார்.

Actor Rajinikanth returns from Maldives to chennai after his vacation trip

ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிறைவு செய்த ரஜினிகாந்த், தொடர்ந்து தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினியின் டைரக்ஷனில் உருவாகிவரும் லால் சலாம் படத்திலும் நடித்து முடித்துவிட்டார். அவர் இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.

இந்த இரு படங்களின் சூட்டிங்கையும் நிறைவு செய்துள்ள ரஜினிகாந்த், அடுத்ததாக ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைய 170வது படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தையும் நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். தற்போது லியோ படத்தின் ரிலீசில் கமிட்டாகி பிசியாக காணப்படும் லோகேஷ், அடுத்ததாக ரஜினியை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக கைதி2, விக்ரம்3 ஆகிய படங்களில் அவர் கமிட்டாகியிருந்த நிலையில், அடுத்ததாக ரஜினியைத்தான் இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Actor Rajinikanth returns from Maldives to chennai after his vacation trip

லால் சலாம் சூட்டிங்கை முடித்த ரஜினிகாந்த், இடையில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு சில தினங்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், தற்போது ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார். அவர் விமானநிலையத்திலிருந்து ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே வெளியில் வந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் வெளியாகவுள்ள நிலையில், நாளைய தினம் படத்தின் இசைவெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்காக 1000 பேருக்கு இலவச பாஸ்களையும் தயாரிப்புத் தரப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில், ரஜினியின் பேச்சை கேட்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். எப்போதுமே இசை வெளியீட்டு நிகழ்ச்சிகளில் ரஜினியின் பேச்சு, சிறப்பாக அமையும். இந்த முறையும் ரசிகர்கள் அவரது பேச்சுக்காக ஆவலுடன் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X