காட்டுக்குள் நடந்த ரஜினி.. கண்டு களித்த மலரும்.. காலில் குத்திய முள்ளும்.. கலகலனு சென்னை ரிட்டர்ன்!

Recommended Video

மோடியின் பாதையில் ரஜினி | Rajinikanth With Bear Grylls

சென்னை: மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பியுள்ளார்.

டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளுமைகள் பங்கேற்றுள்ளனர்.

பியர் கிரில்ஸ் இயக்கி வழங்கும் இந்நிகழ்ச்சியில் அவர்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளார். இதற்கான ஷுட்டிங் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வன விலங்குகள் சரணாலயத்தில் நேற்று நடைபெற்றது.

வீடியோக்கள் வெளியீடு

வீடியோக்கள் வெளியீடு

இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் விமானம் மூலம் தனது இளையமகள் சவுந்தர்யாவுடன் மைசூர் சென்றார் ரஜினிகாந்த். இந்நிலையில் நேற்று ரஜினிகாந்த் ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதிக்கு சென்றார். இந்த வீடியோக்கள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. Man vs wild என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டானது.

இன்று மதியம் வரை

இன்று மதியம் வரை

மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்துகொண்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் அவரது அரசியல் பிரவேசத்துக்கு அச்சாரமாய் இந்த நிகழ்ச்சி இருக்கும் என்றும் கூறப்பட்டது. இன்று மதியம் வரை படப்பிடிப்பு நடைபெறும் என நேற்று தகவல்கள் வெளியாயின.

ரஜினிக்கு காயம்

ரஜினிக்கு காயம்

இந்நிலையில் ஷுட்டிங்கின் போது ரஜினிகாந்துக்கு காயம் ஏற்பட்டு ஷுட்டிங் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஷுட்டிங்கில் ரஜினிகாந்த் தடுமாறி விழுந்ததில் அவருக்கு கணுக்காலில் தசைப்பிடிப்பும் சிராய்ப்பும் ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.

முள் குத்திவிட்டது

முள் குத்திவிட்டது

இதனை தொடர்ந்து நேற்றிரவு நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் எந்த காயமும் ஏற்படவில்லை. சிறு முள் குத்தி விட்டது என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

விரைவில் டெலிகாஸ்ட்

விரைவில் டெலிகாஸ்ட்

இக்கட்டான சூழ்நிலைகளில் உயிர் பிழைத்திருப்பதற்கான வழிமுறைகளை சொல்லும் இந்நிகழ்ச்சி, விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் மோடி கலந்து கொண்டு பியர் கிரில்சுடன் காடுகளில் பயணம் செய்தார். இது டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பானது. மோடியை போலவே ரஜினியும் தன் வாழ்க்கை குறித்து பியர் கிரில்சுடன் பேசுவது போல் அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X