ஹைத்ராபாத்தில் அண்ணாத்த ஷூட்டிங் நிறைவு.. நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்!

சென்னை: ஹைத்ராபாத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததால் நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Rajini ன் Surprise phone call | சந்தோஷத்தின் உச்சியில் நடிகர் King Kong | Adhisaya Piravi

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் நடிகைகள் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

மார்ச் மாதம் படப்பிடிப்பு

மார்ச் மாதம் படப்பிடிப்பு

இதேபோல் நடிகர்கள் ஜெகபதி பாபு, சதீஷ், சூரி, வேல் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் மீண்டும் தொடங்கியது. முதலில் சென்னையில் படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் படக்குழு கடந்த மார்ச் மாதம் மீண்டும் ஹைத்ராபாத் சென்றது.

ஹைத்ராபாத்தில் நிறைவு

ஹைத்ராபாத்தில் நிறைவு

கொரோனா இரண்டாவது அலை காரணமாக பலத்த கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்நிலையில் தற்போது ஹைத்ராபாத்தில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு இன்றுடன் நிறைவடைகிறது.

சென்னை திரும்புகிறார் ரஜினி

சென்னை திரும்புகிறார் ரஜினி

இதனால் நடிகர் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இன்னும் 20 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் பாக்கி உள்ளதால் அதனை கொல்கத்தாவில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

விரைந்து முடிக்க திட்டம்

விரைந்து முடிக்க திட்டம்

வரும் தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்கா செல்லும் ரஜினி

அமெரிக்கா செல்லும் ரஜினி

இதனிடையே படப்பிடிப்பு மற்றும் டப்பிங் பணிகளை முடித்த கையோடு நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X