Rajini: 5 நாட்கள் மட்டுமே சந்தோஷத்தை கொடுத்த ஜெயிலர் படம்.. அதுக்கு அப்புறம்.. ரஜினி பகிர்ந்த தகவல்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய சக்சஸை கொடுத்துள்ளது.

700 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ள நிலையில், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வெற்றியை படக்குழுவினருடன் பகிர்ந்துக் கொண்டுள்ளது.

இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், படம் பலதரப்பட்ட ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

Actor Rajinikanth revealed that Jailer success gives happiness for first 5 days only

ஜெயிலர் படத்தின் வெற்றி முதல் 5 நாட்களுக்கு மட்டுமே சந்தோஷத்தை கொடுத்ததாக ரஜினி பேட்டி: நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை இயக்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக அவரது ஜெயிலர் படத்தை இயக்கியிருந்தது. இந்தப் படம் கடந்த மாதத்தில் சர்வதேச அளவில் ரிலீசான நிலையில், மிகச்சிறப்பான வரவேற்பையும் வசூலையும் படம் குவித்தது. இந்தப் படத்தில் ரிடையர்ட் ஜெயிலராக ரஜினி நடித்திருந்தார். இந்நிலையில் படம் எதிர்பார்த்ததை காட்டிலும் மிகச்சிறந்த என்டர்டெயின்மெண்டை ரசிகர்களுக்கு கொடுத்தது.

தன்னுடைய மகன் கடத்தி கொல்லப்பட்டதாக கருதப்படும் நிலையில், அதற்கு காரணமானவர்களை பழிவாங்கும் நோக்கத்தில் களமிறங்கும் ரஜினி சந்திக்கும் போராட்டங்களை முன்னெடுத்தது ஜெயிலர். இந்த விஷயத்தில் அவருக்கு கைக்கொடுக்கும் நபர்களாக ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் நடித்திருந்தனர். படத்தில் தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, மிர்ணா உள்ளிட்டவர்களுக்கும் சிறப்பான கேரக்டர்கள் அமைந்திருந்தன.

இந்தப் படத்தில் ஏராளமான நட்சத்திரங்களை இணைத்திருந்தபோதிலும், அவர்கள் அனைவரையும் சிறப்பாக படத்தில் பயன்படுத்தியிருந்தார் நெல்சன். ஜாக்கி ஷெராப், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில் என ஒவ்வொரு மொழியிலும் முன்னணி ஹீரோக்களை இந்தப் படத்தில் பயன்படுத்தியிருந்த நிலையில், அனைவருக்கும் சமமான கேரக்டர்கள் கொடுக்கப்பட்டிருந்தன. இதில் வில்லனாக நடித்திருந்த வினாயகன் மற்றும் சிவராஜ்குமார் சிறப்பாக ஸ்கோர் செய்திருந்தனர்.

இந்தப் படம் சர்வதேச அளவில் 700 கோடி ரூபாய்களை கலெக்ஷனாக பெற்றுள்ளது. இதனால் தயாரிப்புத் தரப்பான சன் பிக்சர்ஸ் மிகவும் உற்சாகமடைந்துள்ளது. மேலும் இந்த வெற்றியை படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருடனும் ஷேர் செய்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார் பரிசளிக்கப்பட்டது. இதில் ரஜினி மற்றும் நெல்சனுக்கு வெற்றியில் பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ரிலீசின்போது நடிகர் ரஜினிகாந்த், சென்னையில் இல்லாமல் இமயமலைக்கு புறப்பட்டு சென்றிருந்தார். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு அவர் இந்த பயணத்தை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி முதல் 5 நாட்கள் மட்டுமே தனக்கு சந்தோஷத்தை கொடுத்ததாக நடிகர் ரஜினி தன்னுடைய சமீபத்திய பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். படத்திற்கான ரீ ரெக்கார்டிங் இல்லாமல் பார்த்தபோது படம் ஆவரேஜாகத்தான் இருப்பதாக தனக்கு பட்டதாகவும் கூறியுள்ளார்.

அனிருத்தின் பிஜிஎம் படத்திற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளது. மோகன்லால், சிவராஜ்குமார் போன்றவர்களை எப்படி பயன்படுத்தவேண்டும என்ற வித்தையை நெல்சன் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தின் வெற்றி 5 நாட்கள் தொடர்ந்து மகிழ்ச்சியை கொடுத்த நிலையில் அடுத்ததாக டென்ஷனையே கொடுத்ததாகவும் ரஜினி குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய அடுத்தப்படத்தை ஜெயிலர் படத்தைவிட சிறப்பாக எப்படி கொடுப்பது என்ற டென்ஷனை ஜெயிலர் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X