பிபி ஏறிய ரஜினிகாந்த்.. எப்படி வெளியே வந்தார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையும் கட்டத்தில் உள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தையும் அறிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
பொதுவெளியிலும் அதிகமான நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்கிறார் ரஜினிகாந்த். சமீபத்தில் நடிகை மீனாவின் மீனா40 நிகழ்ச்சியிலும் இவரை காண முடிந்தது.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களை சரியான இடைவெளியில் கொடுத்து வருகிறார். கடந்த ஆண்டில் இவரது அண்ணாத்த படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் வசூலில் மாஸ் காட்டியது. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்ட இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது தங்கையாகவும், நயன்தாரா ரஜினியின் ஜோடியாகவும் நடித்திருந்தனர். முறைப்பெண்களாக அவரது படங்களின் நாயகிகள் குஷ்பூ மற்றும் மீனா கலக்கல் பர்பார்மென்ஸ் கொடுத்திருந்தனர். சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ் என நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது.

ஜெயிலர் படம்
இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு நடத்தப்பட்டது. தொடர்ந்து சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெராப், யோகிபாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோரும் நடித்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துவரும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

ரசிகர்களை கவரும் புகைப்படங்கள்
இந்தப் படத்தின் சூட்டிடங சென்னை, ராஜஸ்தான், மங்களூரு ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில், விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்து அடுத்தடுத்த அப்டேட்களை கொடுக்க படக்குழு திட்டமிட்டு, சூட்டிங்கை துரிதப்படுத்தியுள்ளது. வரும் மே மாதத்திலோ அல்லது தீபாவளி ஸ்பெஷலாகவோ படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

மீனா40 நிகழ்ச்சியில் ரஜினி
இந்தப் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ள ரஜினிகாந்த், பொது நிகழ்ச்சிகளிலும் அதிகளவில் பங்கேற்று வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற மீனா40 என்ற நிகழ்ச்சியிலும் இவரை காண முடிந்தது. மீனாவின் சிறப்பான ஜோடியாக கருதப்படும் ரஜினிகாந்த், அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சியில் மீனாவின் சோகம் குறித்தும் தன்னுடைய வருத்தத்தை ரஜினி பகிர்ந்துக் கொண்டார்.

ரஜினிக்கு பிபி அதிகரித்த கதை
இதனிடையே மற்றொரு தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரஜினிகாந்த், தன்னுடைய மற்றும் தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்தின் பிபி அதிகமாகும் சூழல் காணப்பட்டதாகவும் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதிலிருந்து தாங்கள் எப்படி வெளியில் வந்தோம் என்பது குறித்தும் சுவாரஸ்யத்தை பகிர்ந்துக் கொண்டார். ஒரு திருமணத்திற்கு சென்ற லதா ரஜினிகாந்த், சமையல் சிறப்பாக இருக்கவே, அந்த சமையல்காரர் யார் என்று கேட்டு, அவரை தங்களது வீட்டின் சமையல்காரராக நியமித்துள்ளார்.

மகிழ்ச்சியடைந்த குடும்பத்தினர்
இதையடுத்து நாராயணன் என்ற அந்த சமையல்காரரின் சமையல் அற்புதமாக அமையவே, குடும்பத்தினரே மகிழ்ச்சியடைந்துள்ளனர். அப்படி ஒரு சுவையில் அவர் சமைத்தாலும் ரஜினிக்கும், லதா ரஜினிக்கும் தொடர்ந்து பிபி அதிகரித்துள்ளது. மருத்துவர்கள் பரிசோதித்த நிலையிலும் அதை குறைக்க முடியாமல் இருவரும் மனஉளைச்சலில் இருந்துள்ளனர். அப்போதுதான் அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் அவர்கள் வீட்டில் சாப்பிட வந்துள்ளார்.

நண்பரால் வெளியில் வந்த உண்மை
அவரிடம் சமையல் எப்படி என்று ரஜினி கேட்க, அவரோ, இவ்வளவு எண்ணெய், உப்பு அதிகமான சமையலை எப்படி சாப்பிடுகிறீர்கள் என்று முகத்திற்கு நேராகவே கேட்டுள்ளார். இதையடுததுதான் தங்களின் பிபி அதிகமானதற்கு காரணத்தை கண்டறிந்து சமையலில் மாற்றத்தை ஏற்படுத்தியதாகவும் அதிலிருந்து மீண்டதாகவும் ரஜினிகாந்த் சுவாரஸ்யம் பகிர்ந்துள்ளார். உணவில் உப்பு அதிகமானால் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











