twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் ராமச்சந்திர ராவ் காலமானார்.. சோகத்தில் சூப்பர் ஸ்டார் குடும்பம்!

    |

    சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் பத்திரிக்கையாளர் நண்பர் ராமச்சந்திர ராவ் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 73.

    கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகர் ரஜினிகாந்த்.

    கணவர் மரணத்திற்கு பிறகு முதல் முறையாக ஹேர் ஸ்டைலை மாற்றிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்! கணவர் மரணத்திற்கு பிறகு முதல் முறையாக ஹேர் ஸ்டைலை மாற்றிய நடிகை.. தீயாய் பரவும் போட்டோஸ்!

    நடிகர் ரஜினிகாந்த் இதுவரை 160க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் தர்பார்.

    கடைசியாக தர்பார் படம்

    கடைசியாக தர்பார் படம்

    தர்பார் படத்தில் ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக ஆதித்ய அருணாச்சலம் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நயன்தாரா, சிம்ரன், யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த்

    அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த்

    இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் 'அண்ணாத்த' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இமான் இசையமைத்து வருகிறார்.

    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்

    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில்

    நடிகர் ரஜினிகாந்த் தனது அடுத்தப்படத்திற்கான கதையை கேட்டு வருகிறார். ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து பல்வேறு இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டு வந்தன. இறுதியாக 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவிருப்பது உறுதியாகியுள்ளது.

    பெரும் சோகத்தில் ரஜினிகாந்த்

    பெரும் சோகத்தில் ரஜினிகாந்த்

    தேசிங்கு பெரியசாமி கூறிய கதை மிகவும் பிடித்திருந்ததால் ரஜினி உடனே ஒ.கே சொல்லியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் ரஜினிகாந்த் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார். காரணம் அவரது பத்திரிக்கையாளர் நண்பரான ராமச்சந்திர ராவ் காலமாகியுள்ளார்.

    நண்பர் ராமச்சந்திர ராவ் மரணம்

    நண்பர் ராமச்சந்திர ராவ் மரணம்

    ரஜினிகாந்தின் சிறு வயது நண்பரான ராமச்சந்திர ராவ், கர்நாடகாவை பூர்விகமாக கொண்டவர். கன்னட நாளிதழ் சம்யுக்தா கர்நாடகா ராமச்சந்திர ராவ் மரணம் தொடர்பான அறிவிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி "பிரபல நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பராக இருந்த 'சம்யுக்தா கர்நாடகா'வின் ஓய்வுபெற்ற ஊழியர் ராமச்சந்திர ராவ் (73) காலமானார்.' சம்யுக்தா கர்நாடகா'வுக்கான ப்ரூஃப் ரீடராக பணியாற்றினார்.

    ரஜினிகாந்தை தலைப்பு செய்தியாக்கிய நண்பர்

    ரஜினிகாந்தை தலைப்பு செய்தியாக்கிய நண்பர்

    சம்யுக்தா கர்நாடகா பத்திரிகையில் இருந்து ராமச்சந்திர ராவ் 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். அவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. சம்யுக்தா கர்நாடகாவில் பணியாற்றியதாக ரஜினிகாந்த் 2018 ல் கூறியபோது ராமச்சந்திர ராவ் அதனை தலைப்புச் செய்தியாக வெளியிட்டார்.

    அலுவலகத்தில் ராமச்சந்திர ராவை சந்தித்தார்

    அலுவலகத்தில் ராமச்சந்திர ராவை சந்தித்தார்

    நடிகர் ரஜினிகாந்த் ராவை சந்திக்க சம்யுக்தா கர்நாடகா அலுவலகத்திற்கு ஒரு முறை சென்றுள்ளார். இதுதொடர்பாக லோகா ஷிக்சனா டிரஸ்டின் தலைவர் உமேஷ் பட் கடந்த 2018ஆம் ஆண்டு ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். அதாவது தனிப்பட்ட முறையில் நடிகர் ரஜினிகாந்த் அலுவலத்திற்கு வந்து ராமச்சந்திர ராவை சந்தித்தார்.

    ராமச்சந்திர ராவுக்கு நெருங்கிய நண்பர்

    ராமச்சந்திர ராவுக்கு நெருங்கிய நண்பர்

    இதனை தொடர்ந்து நான் எங்கள் மனிதவளத் துறை மற்றும் மூத்த ஊழியர்களிடம் விசாரித்த போது, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பரான ராமச்சந்திர ராவ் எங்கள் செய்தித்தாளில் ஒரு புரூஃப் ரீடராக பணியாற்றுகிறார் என்று அவர்கள் என்னிடம் சொன்னார்கள். ரஜினிகாந்த் தனது நண்பரைச் சந்திக்க எங்கள் அலுவலகத்திற்கு வருவார்.

    நண்பருக்கு உதவி செய்த ரஜினி

    நண்பருக்கு உதவி செய்த ரஜினி

    ராமச்சந்திர ராவுக்கு அவர் உதவிகளை செய்தார். ஆனால் அது அவருக்கு அதிகாரப்பூர்வமற்ற வேலை. அதற்காக நாங்கள் அவருக்கு பணம் எதுவும் கொடுத்ததாக நான் நினைக்கவில்லை. ரஜினிகாந்த் பத்திரிகையில் ஆர்வம் கொண்டிருந்தார் மற்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அவரது நண்பர் ராமச்சந்திர ராவுக்கு உதவினார் என்றும் கூறியிருந்தார்.

    சோகத்தில் ரஜினி காந்தின் குடும்பம்

    சோகத்தில் ரஜினி காந்தின் குடும்பம்

    உடல் நலக்குறைவு காரணமாக ராமச்சந்திர ராவ் மரணமடைந்ததாக தெரிகிறது. ராமச்சந்திர ராவ் மரணமடைந்த தகவல் நடிகர் ரஜினிகாந்தையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Actor Rajinikanth's close friend Ramachandra Rao passes away. Rajinikanth is in deep grief.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X