கடவுள்தான் மனது வைக்க வேண்டும்.. அண்ணாத்த கடைசி நாள் ஷூட்டிங்கில் கலங்க வைத்த ரஜினிகாந்த்!

சென்னை: அண்ணாத்த படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது.

ஆனால் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. அப்போது படக்குழுவில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்

ஹைத்ராபாத்தில் ஷூட்டிங்

இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட கடந்த மார்ச் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், 30 நாட்களுக்கு மேலாக தனது காட்சிகளை நடித்து கொடுத்தார்.

ரஜினி உருக்கம்

ரஜினி உருக்கம்

அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிநாள் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் படக்குழுவினரிடம் ரஜினிகாந்த் பேசிய உருக்கமான பேச்சு குறித்த தகவல் வைரலாகி வருகிறது.

நடிக்க ஆசை உள்ளது

நடிக்க ஆசை உள்ளது

ரஜினிகாந்த் பேசியதை படக்குழுவினர் பகிர்ந்து வருகின்றனர். ரஜினிகாந்த் பேசியதாவது, மேலும் ஓரிரு படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. இந்த கொரோனா தொற்று முடிவுக்கு வந்ததும்தான் அந்த எண்ணத்தை சாத்தியப்படுத்த முடியும்.

Recommended Video

Thalaivar Rajinikanth கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளார் | MK Stalin, Rajinikanth
கடவுள் மனசு வைக்கணும்

கடவுள் மனசு வைக்கணும்

எனது உடல்நிலையும் அதுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கெல்லாம் கடவுள்தான் மனது வைக்க வேண்டும். அண்ணாத்த படம் நிறைவு பகுதியை எட்டியதில் எனக்கு மகிழ்ச்சி. எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். குடும்பத்தினரையும் பார்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

2 நாட்கள் பாக்கி உள்ளது

2 நாட்கள் பாக்கி உள்ளது

அண்ணாத்த படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் போர்ஷன் இன்னும் 2 நாட்கள் பாக்கி உள்ளது. கொரோனா இரண்டாவது அலை முடிவுக்கு வந்த பிறகு அந்தக் காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X