இறுதிக்கட்டத்தில் ஜெயிலர் பட சூட்டிங்.. ஏப்ரல் 14ல் படத்தின் அப்டேட் வெளியாக வாய்ப்பு!
சென்னை :நடிகர் ரஜினிகாந்த், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் ஜெயிலர்.
பீஸ்ட் படத்தை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.
இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மாதத்திற்குள் சூட்டிங் நிறைவடையும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

ஜெயிலர் படம்
நடிகர் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், சுனில், மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னை, ராஜஸ்தான், மங்களூரு ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் பிரம்மாண்டமான ஜெயில் செட் போடப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மற்ற இடங்களிலும் சூட்டிங் நடைபெற்ற நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கம்
இந்தப் படத்தை பீஸ்ட் படத்திற்கு பிறகு நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதையடுத்து ஜெயிலர் படத்தை நெல்சன் இயக்குவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அறிவித்தபடி ரஜினி படத்தில் இணைந்தார் நெல்சன். இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கும் நிலையில், மிகவும் கவனமுடன் காட்சிகளை எடுத்து வருகிறார் நெல்சன்.

துரிதப்படுத்தப்படும் சூட்டிங்
படம் மே மாதத்திலோ அல்லது தீபாவளியையொட்டியோ ரிலீசாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய திட்டமிட்டு நெல்சன் சூட்டிங்கை துரிதப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக காந்தாரா படத்தின் சூட்டிங் நடத்தப்பட்ட பண்ணைவீட்டில் ஜெயிலர் படத்தின் சூட்டிங்கும் எடுக்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ஆக்ஷன் த்ரில்லர் ஜானர்
ரஜினியின் 169வது படமான ஜெயிலர் பான் இந்தியா படமாக உருவாகியுள்ள நிலையில், மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் என ஒவ்வொரு மொழியிலும் ஒரு நடிகர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் ஜெயிலர் படம் உருவாகி வருகிறது. ரிடையர்ட் ஜெயிலராக ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படம் சிறையில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதையாக உருவாகிவருகிறது.

சென்னையில் சூட்டிங்
தற்போது சென்னையில் ஜெயிலர் படத்தின் சூட்டிங் நடைபெற்றுவரும் நிலையில் வாரத்தில் 3 நாட்கள் சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார் ரஜினிகாந்த். போதுமான இடைவெளிகளில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்றுவரும் நிலையில் அடுத்தமாதம் சூட்டிங் நிறைவடையவுள்ளது. இதனிடையே ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை நெல்சன் அணுகுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











