ஒரே நாள் சூட்டிங்கிற்காக கொச்சி சென்ற ரஜினிகாந்த்.. அதனால்தான் அவர் சூப்பர்ஸ்டார்!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்க்ததில் உருவாகிவரும் ஜெயிலர் படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் போன்ற நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது.
பான் இந்தியா படமாக ஜெயிலர் ரிலீசாகவுள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

ஜெயிலர் படம்
அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்து வருவதாகவும் சிறையில் நடக்கும் பிரச்சினைகளை அவர் எவ்வாறு எதிர்கொண்டு சமாளிக்கிறார் என்பதை கதைக்களமாக கொண்டு நெல்சன் படத்தை இயக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

நட்சத்திர பட்டாளம்
படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என ஒவ்வொரு மொழியிலும் முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளனர். படம் பான் இந்தியா படமாக ரிலீசாகவுள்ளது. படத்தில் தமன்னா முதல்முறையாக ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னையில் சிறைச்சாலை செட் பிரம்மாண்டமாக போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது.

அடுத்தடுத்த இடங்களில் சூட்டிங்
தொடர்ந்து ராஜஸ்தான், ஐதராபாத், கடலூர், பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட இடங்களிலும் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டது. இதனிடையே கடந்த சில தினங்களாக படத்தின் சூட்டிங் கொச்சியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூட்டிங்கிற்காக ரஜினிகாந்த் கொச்சி புறப்பட்டு சென்ற வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கொச்சியில் க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ரஜினியின் டெடிகேஷன்
இந்நிலையில் கொச்சியில் வெறும் ஒரு நாள் சூட்டிங்கிற்காக ரஜினிகாந்த் புறப்பட்டு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் காட்சிகளுக்காக கிரீன் மேட் உபயோகித்திருக்க வாய்ப்புகள் இருந்தும் லைவ் லோகேஷனில் அவர் நடித்து கொடுத்துள்ளார். இந்த டெடிகேஷன்தான் அவர் சூப்பர்ஸ்டாராக மாறுவதற்கு காரணம் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கொச்சியில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகில் ரஜினி சம்பந்தப்பட்ட க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே ஜெயிலர் படம் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 11ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் அடுத்தடுத்த படங்கள்
ரஜினியின் அடுத்தடுத்தப் படங்கள் தொடர்ந்து திட்டமிடப்பட்டு வருகின்றன. அடுத்ததாக தன்னுடைய மகள் ஐஸ்வர்யா ரஜினியின் லால் சலாம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இதற்காக தன்னுடைய கெட்டப்பை மாற்றி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யாவின் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் அடுத்தப்படத்தில் அவர் நடிக்கவுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











