ஜெயிலர் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான புகைப்படம்.. சூப்பரான கெட்டப்பில் ரஜினி!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஜனவரியில் வெளியானது அண்ணாத்த படம். படத்தின் அண்ணன் -தங்கை பாசம் கதைக்களமாக கொள்ளப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.

இதனிடையே தன்னுடைய அடுத்தப்படமான ஜெயிலர் படத்தில் தற்போது ரஜினிகாந்த் நடித்து வருகிறார். படத்தை நெல்சன் இயக்கி வருகிறார்.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 169 படத்தில் நெல்சன் திலீப்குமாருடன் இணைந்துள்ளார் . படத்தின் சூட்டிங் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கப்பட்டு சென்னை ஈசிஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடைபெற்று வருகிறது. அண்ணாத்த படத்தை தொடர்ந்து இந்தப் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

விறுவிறுப்பான சூட்டிங்

விறுவிறுப்பான சூட்டிங்

இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், விஜய்யுடன் அவர் இணைந்திருந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ரஜினியை இயக்கும் நெல்சன்

ரஜினியை இயக்கும் நெல்சன்

இந்நிலையில் தற்போது ரஜினியுடன் நெல்சன் இணைந்துள்ளார். இந்தப் படத்தை வெற்றிப் படமாக்க வேண்டிய கட்டாயத்தில் நெல்சன் உள்ளார். படத்தில் நீண்ட காலங்களுக்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் ரஜினியுடன் இணைந்துள்ளார். மேலும் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, விநாயகன் உள்ளிட்டவர்களும் நடித்து வருகின்றனர்.

வெளியான புகைப்படம்

வெளியான புகைப்படம்

படத்தின் சூட்டிங் பிரம்மாண்டமாக ஜெயில் செட் அமைக்கப்பட்டு எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே இந்தப் படத்தின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் நடிகர் ரஜினி வித்தியாசமான கெட்டப்பில் காணப்படுகிறார்.

நாயகி யார்?

நாயகி யார்?

படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நாயகி குறித்த விவரங்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. முன்னதாக படத்தின் சூட்டிங்கின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் லீக்காகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹிட்டடிக்குமா ஜெயிலர்?

ஹிட்டடிக்குமா ஜெயிலர்?

முன்னதாக ரஜினியின் அண்ணாத்தப் படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலேயே வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் வசூல்ரீதியாக சிறப்பாக அமைந்ததாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படம் சூப்பர் ஹிட்டடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X