அடுத்தகட்ட சூட்டிங்கிற்காக மைசூருக்கு போகும் ஜெயிலர் டீம்.. அப்டேட் இதோ!
சென்னை : நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.
படத்தின் சூட்டிங்கை விரைவில் முடித்து வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தயாரிப்புக்குழு திட்டமிட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் கடந்த ஆண்டில் வெளியானது. அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக வைத்து இந்தப் படம் வெளியானது. தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ரஜினியின் ஜோடியாக நயன்தாரா நடித்திருந்த நிலையில், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருந்தது.

அண்ணாத்த படம்
இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சிறப்பாக கைக்கொடுத்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்தை சிவா இயக்கியிருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

ஜெயிலர் படத்தின் சூட்டிங்
படத்தின் சூட்டிங் சென்னை, ராஜஸ்தானின் ஜெய்சல்மார் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற நிலையில், மங்களூரில் சிவராஜ்குமார், ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டன. படத்தின் சூட்டிங் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

அடுத்தடுத்த புகைப்படங்கள்
முன்னதாக ரஜினியுடன் மோகன்லால் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், சமீபத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார் ஆகியோர் இணைந்திருந்த புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்தப் புகைப்படத்தில் லுங்கியுடன் மிகவும் இயல்பாக ரஜினிகாந்த் காணப்பட்டார்.

அடுத்ததாக மைசூருவில் சூட்டிங்
மங்களூருவில் சூட்டிங்கை முடித்துள்ள படக்குழு தற்போது மைசூருவில் சூட்டிங் நடத்தவுள்ளதாகவும் அதற்காக ரஜினிகாந்த் உள்ளிட்ட படக்குழுவினர் மைசூருக்கு சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகிவரும் இந்தப் படத்தில் ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார்.

அதிரடி ஆக்ஷன் கதை
மேலும் சிறையில் நடக்கும் அதிரடி ஆக்ஷன் கதையாக இந்தப் படம் உருவாகி வருவதாக கூறப்பட்டுள்ளது. படம் பான் இந்தியா படமாக உருவாகிவரும் சூழலில் மோகன் லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விநாயகன் என பலரும் இணைந்துள்ளனர்.

ஜெயிலர் பட ட்ரீட்
ஜெயிலர் படத்தின் 70 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வரும் மே மாதமோ அல்லது தீபாவளி ஸ்ஷெலாகவோ திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது. எதுவாக இருந்தாலும் இந்த ஆண்டிலேயே ஜெயிலர் ட்ரீட் ரசிகர்களுகாக காத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications











