என்னது தலைவர் 170 அறிவிப்பு வெளியாகுதா.. அதுவும் பொன்னியின் செல்வன் ஆடியோ லாஞ்ச்ல.. காத்திருப்போம்!

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது தன்னுடைய தலைவர் 169 படத்திற்காக இயக்குநர் நெல்சனுடன் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜெயிலர் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவரது அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளியானவண்ணம் உள்ளன. விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்திற்கு பிறகு தற்போது தலைவர் 169 படத்தில் இணைந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. படத்தின் சூட்டிங் கடந்த 22ம் தேதி துவங்கியுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

ஜெயிலர் படத்தில் ஜெய்?

ஜெயிலர் படத்தில் ஜெய்?

இந்நிலையில் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரெடின் கிங்ஸ்லி, வசந்த் ரவி உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக பிரியங்கா மோகன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்களும் படத்தில் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்கு பதிலாக அந்தக் கேரக்டரில் நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 துவங்கிய சூட்டிங்

துவங்கிய சூட்டிங்

மேலும் படத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோரும் வில்லன்களாக கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் பழைய உட்லண்ட்ஸ் திரையரங்கில் துவங்கப்பட்டு, அங்கு காவல்நிலையத்தில் நடக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ்

பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸ்

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்நிலையில் ரஜினியின் அடுத்தப்படம் குறித்த தகவல்களும் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. நடிகர் ரஜினி மற்றும் கமல்ஹாசன் நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டில் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தலைவர் 170 பட அறிவிப்பு?

தலைவர் 170 பட அறிவிப்பு?

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினியின் தலைவர் 170 படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஜினி அடுத்ததாக டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியை இயக்கும் சிபி சக்ரவர்த்தி?

ரஜினியை இயக்கும் சிபி சக்ரவர்த்தி?

சிவகார்த்திகேயனின் டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி, மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளார். அந்தப் படம் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து சிவகார்த்திகேயனுக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. அந்த கேரக்டர் மற்றும் கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

காமெடி படமா?

காமெடி படமா?

இந்நிலையில் நடிகர் ரஜினியின் படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளதாக கடந்த சில வாரங்களாகவே தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்நிலையில் இந்தப் படம் குறித்த அறிவிப்பு நாளைய தினம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. காமெடி என்றாலே ரஜினி அதகளம் செய்வார். இந்நிலையில் ரஜினியை சிபி, எப்படி திரையில் கொண்டுவருவார் என்பது குறித்து ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X