Rajinikanth :அடுத்த மாதத்தில் துவங்கும் தலைவர் 170 படம்.. என்ன கதை தெரியுமா?
சென்னை :தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை முடித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் இரண்டொரு நாட்களில் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் இந்த ஆண்டிற்குள் ரிலீசாகவுள்ள நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கி விடப்பட உள்ளன.
இந்தப் படத்தை தொடர்ந்து லால் சலாம் படத்தின் சூட்டிங்கில் ரஜினி இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.

ரஜினியின் 170வது படம் : நடிகர் ரஜினிகாந்த், இந்த வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக மற்றவர்ளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகிறார். நல்ல உடற்பயிற்சி, அளவான உணவு என தன்னை சிறப்பாக தகவமைத்து வருகிறார். கடந்த ஆண்டில் வெளியான அண்ணாத்த படத்தை தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் இரண்டொரு தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடுக்கிவிடப்பட்டு இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், மோகன்லால் உள்ளிட்ட பலரும் இணைந்துள்ள நிலையில், படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயம் ரஜினி மற்றும் நெல்சன் இருவருக்கும் உள்ள நிலையில் முழு உழைப்பை அவர்கள் படத்தில் போட்டுள்ளனர்.
இந்நிலையில், அடுத்ததாக தன்னுடைய மூத்த மகள் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படத்தில் இணையவுள்ளார் ரஜினி. இந்தப் படத்தில் முஸ்லிம் பெரியவராக ரஜினி நடிக்கவுள்ளதால், அவர் மீசை மற்றும் நீண்ட தாடி வளர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரஜினியின் 170வது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மிகவும் அழுத்தமான கதைக்களத்தில் உருவாகவுள்ளதாம். இந்தப் படத்தில் ரிடையர்ட் முஸ்லிம் போலீஸ் அதிகாரியாக, என்கவுண்டருக்கு எதிராக போராடும் கேரக்டரில் ரஜினி நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தன்னுடைய முதல் படத்தை போலவே இரண்டாவது படத்திலும் ஞானவேல் அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் படத்தை போலவே இந்தப் படத்திலும் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஞானவேல் திட்டமிட்டுள்ளதாக படம் கண்டிப்பாக வித்தியாசமான அனுபவங்களை ரசிகர்களுக்கு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படமும் ஜெயில் தண்டனை, நீதிமன்றம், சிறை என அந்த பின்புலத்திலேயே எடுக்கப்படவுள்ளதால், இதில் எப்படி வித்தியாசத்தை அவர் கொண்டு வருவார் என்றும் ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











