Rajinikanth: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து எனக்கு தெரியாது.. பதில் சொல்லாமல் நழுவிய ரஜினிகாந்த்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது கூலி படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து நடித்து வருகிறார். இதனிடையே அவரது வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10ம் தேதி சோலோவாக ரிலீசாகவுள்ளது. இந்த படத்துடன் இணைந்து போட்டியிட இருந்த சூர்யாவின் கங்குவா படம் போட்டியிலிருந்து விலகி உள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் ரஜினியிடம் பேசிய செய்தியாளர்கள் கேரளாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பினர். மேலும் சூர்யா குறித்தும் கால்பந்தாட்டம் குறித்தும் வேட்டையன், கூலி படங்கள் குறித்தும் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில் அனைத்திற்கும் ரஜினிகாந்த் பதில் அளித்ததை பார்க்க முடிந்தது.

rajinikanth coolie hema committee report

நடிகர் ரஜினிகாந்த்: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து இந்திய அளவில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகள் உருவாகி வருகின்றன. நடிகைகள் ராதிகா, குஷ்பூ, ரஞ்சனி, அமலாபால், சமந்தா உள்ளிட்டவர்களும் இந்த அறிக்கை குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். ஆயினும் கேரளாவின் மூத்த நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி இந்த விவகாரத்தில் வாய் திறக்காமல் மௌனம் சாதித்தது பல்வேறு சர்ச்சைகளையும் கண்டனங்களையும் எழுப்பியிருந்தது. இந்நிலையில் ஒருவர் பின் ஒருவராக மோகன்லால் மற்றும் மம்முட்டி இருவரும் ஹேமா கமிட்டி அறிக்கையில் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.

ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி: இந்நிலையில் நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் புகார் அடிப்படையில் நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோல நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அடுத்தடுத்து தமிழ் திரையுலகினரிடமும் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனிடையே தமிழக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடமும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இன்றைய தினம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று நடிகர் ரஜினிகாந்த் பதிலளித்துள்ளார்.

சூர்யாவிற்கு நன்றி: இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த ரஜினியின் இந்த பதில் பல்வேறு தரப்பினரின் புருவங்களை உயர்த்த செய்துள்ளது. ரஜினியிடம் அடுத்தடுத்த கேள்வி எழுப்பப்பட்டன. கால்பந்தாட்ட போட்டி குறித்து வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், மூத்த நடிகர் ரஜினிக்கு வழி விடுவதாக நடிகர் சூர்யா நேற்றைய தினம் தெரிவித்துள்ளதற்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளார். இதனிடையே கூலி படத்தின் சூட்டிங் மிகவும் சிறப்பாக நடந்து வருவதாகவும் ரஜினிகாந்த் உற்சாகமாக பதில் அளித்தார்.

கூலி படத்தில் ரஜினிகாந்த்: சூர்யாவின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி தெரிவித்துள்ள ரஜினிகாந்த், அவரது கங்குவா படமும் சிறப்பான வெற்றியை பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தில் நடிகர்கள் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ள நிலையில், இவர்களின் கேரக்டர்களின் பெயர்களையும் போஸ்டர்களையும் அடுத்தடுத்து லோகேஷ் கனகராஜ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X