டியர் கிரில்ஸ் நன்றி.. மறக்க முடியாத அனுபவத்தை கொடுத்துட்டீங்க.. லவ் யூ.. உருகிய ரஜினி!
Recommended Video
சென்னை: மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் பங்கேற்க செய்ததற்காக அந்நிகழ்ச்சியின் இயக்குநரும் தொகுப்பாளருமான பியர் கிரில்ஸ்க்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை தொடர்ந்து மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றுள்ளளார். இந்த நிகழ்ச்சி விரைவில் டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது.

இதன் படப்பிடிப்பு நேற்று கர்நாடக மாநிலம் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் நடைபெற்றது. மேன் வெர்சஸ் வைல்டு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்ற தகவல் நேற்று வைரலானது.
இந்நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்துடன் இருக்கும் போட்டோவை தனது பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அதோடு பிரதமர் நரேந்திர மோடியுடனான எங்கள் எபிசோட் ஒரு சிறிய தொலைக்காட்சி வரலாற்றை உருவாக்க உதவியது, (3.6 பில்லியன் பதிவுகள்)
அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னுடன் இணைகிறார், அவர் எங்கள் புதிய நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகமாகியிருக்கிறார் என குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் பியர் கிரில்ஸ்க்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், டியர் பியர் கிரில்ஸ்.. மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி.. லவ் யூ.. நன்றி டிஸ்கவரி என்றும் குறிப்பிட்டிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இந்த டிவிட் லைக்ஸ்களை அள்ளி வருகிறது. அதோடு அதிகளவு ரீடிவிட் செய்யப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி பிரதமர் மோடியின் நிகழ்ச்சியை போன்று ஒரு வரலாற்றை படைக்கும் என அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றன.
ரஜினியின் டிவிட்டை பார்த்த ரசிகர்கள் தலைவா நீங்க நலமாக இருக்கீங்கல்ல அது போதும் எங்களுக்கு.. லவ் யூ தலைவா என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications