சல்மானை இயக்கும் அட்லி.. அட இந்த சூப்பர் காம்பினேஷனில் சூப்பர்ஸ்டார் ஜாய்ன் ஆகிறாரா?
சென்னை: இயக்குனர் அட்லியின் ஜவான் படம் கடந்த ஆண்டில் வெளியாகி 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தது. ஷாருக்கான், நயன்தாரா, பிரியாமணி உள்ளிட்ட நடிகர்கள் நடித்திருந்த இந்த படம் அட்லிக்கு இயக்குனராக மிகப்பெரிய அளவில் கை கொடுத்துள்ளது. அவரது அடுத்தப்படத்திலும் சூப்பரான காம்பினேஷனில் இணைவதற்காக அவர் பொறுமையுடன் காத்திருந்தார்.
இந்நிலையில் அவர் அடுத்ததாக பாலிவுட்டில் பிரபல ஹீரோ சல்மான் கானுடன் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஷாருக்கான் -விஜய் கூட்டணியில் அடுத்த படத்தை பிரம்மாண்டமாக இயக்க உள்ளதாக அட்லி கூறியிருந்தார். விஜய் நடிப்புக்கு முழுக்கு போட உள்ளதால் இந்த காம்பினேஷன் சாத்தியப்படாத நிலையில் தற்போது சல்மான்கான் மற்றும் ரஜினிகாந்தை இணைத்து மாஸ் காட்ட தயாராகி வருகிறார் அட்லி.

இயக்குநர் அட்லி: கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் 1000 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்து சர்வதேச அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் நடிகை நயன்தாரா ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படம் இயக்குனர் அட்லிக்கு சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது. பாலிவுட்டில் அதிக கவனம் பெற்ற இயக்குனராக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் விஜய்யுடன் அட்லி இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கான எந்த தகவலும் தற்போது இல்லை.
சல்மானுடன் இணையும் ரஜினி?: விஜய் தனது தளபதி 69 படத்தை ஹெச் வினோத்துடன் இணைந்து கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் இணைந்து அட்லி அடுத்த படத்தை கொடுக்க உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது மீண்டும் பாலிவுட்டில் இயக்குனர் அட்லி இணையவுள்ளதாக கூறப்படுகிறது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள இந்த படத்தில் சல்மான் கான் ஹீரோவாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் மற்றொரு அட்ராக்ஷனாக நடிகர் ரஜினிகாந்தும் இணைய உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பு?: இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் இதற்கான இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. ஜவான் படத்தை தொடர்ந்து பிரம்மாண்டமான படத்தில் இணைவதற்காக அட்லி காத்திருந்த நிலையில் தற்போது சல்மானுடன் அவர் இணைவதற்கான வேலைகள் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் ஹீரோயின் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் படத்தின் அறிவிப்பு குறித்தும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் சல்மான் கான் இணைந்துள்ளார்.
சல்மான்கான் விருப்பம்: இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விஷ்ணுவர்தனுடனும் சல்மான்கான் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது அட்லியும் இந்த லிஸ்டில் இணைந்துள்ள நிலையில் முருகதாஸ் படத்திற்கு பிறகு அட்லி அல்லது விஷ்ணு வர்தன் இவர்களில் யாரை சல்மான்கான் டிக் செய்வார் என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. தனது சமீபத்திய பேட்டியில் ஹாலிவுட் செல்ல எப்போதுமே தான் விருப்பப்பட்டது இல்லை என்றும் ஆனால் தென்னிந்திய சினிமாவில் நுழைய தனக்கு எப்போதுமே விருப்பம் அதிகம் என்றும் தெரிவித்திருந்தார் சல்மான்கான். அந்த வகையில் அடுத்தடுத்து தென்னிந்திய இயக்குனர்களை அவர் தேர்வு செய்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











