Rajinikanth: விஜய்யை இயக்கினால் ரஜினி பட வாய்ப்பா. அந்த வரிசையில் இணைகிறாரா கோட் பட இயக்குநர்?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேடடையன் படம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் படம் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. லைகா நிறுவன தயாரிப்பாக வெளியான இந்தப்படத்தில் மாஸ் காட்டியிருந்தார் ரஜினிகாந்த்.

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இது அவரது 171வது படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடந்த நிலையில், ரஜினிகாந்தின் உடல்நல பாதிப்பு காரணமாக அவரை விட்டுவிட்டு மற்ற நடிகர்களின் போர்ஷன்களை லோகேஷ் தற்போது இயக்கி வருகிறார்.

vijay rajinikanth venkat prabhu

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான வேட்டையன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. மழையிலும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க மக்கள் ஆர்வம் காட்டினர். டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தின் கதைக்களம் ரசிகர்களை சிறப்பாக கவர்ந்த நிலையிலும், ரஜினி படங்களுக்கான அவரது மாஸ் படத்தில் குறைவதாக விமர்சனங்கள் எழுந்தன. படத்தில் ரஜினியுடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் என ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்திருந்தனர்.

கூலி படத்தில் ரஜினிகாந்த்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் டைட்டில் டீசர், போஸ்டர்கள் என முன்னதாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், படம் தங்கக் கடத்தலை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் இதுவரை இல்லாத வகையில் ரஜினிகாந்தை அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மீண்டும் ரசிகர்களிடம் காட்சிப் படுத்தவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங்கை அடுத்தடுத்து ஐதராபாத், சென்னை ஆகிய இடங்களில் நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2: இந்தப் படங்களை தொடர்ந்து மீண்டும் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளதாகவும், முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன்ஸ் வேலைகளில் தற்போது நெல்சன் திலீப்குமார் ஈடுபட்டுள்ளார். தயாரிப்பாளராகவும் மாறியுள்ள நெல்சன் திலீப்குமார், பிளடி பெக்கர் படத்தின் பிரமோஷன்களுக்கிடையில், ஜெயிலர் 2 படத்தின் வேலைகளிலும் அடுத்தடுத்து ஈடுபட்டுவருகிறார். கூலி படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரித்து வருகிறது.

ரஜினிகாந்த் -வெங்கட் பிரபு காம்போ?: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநரும் நடிகருமான வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான கோட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. தமிழகத்தில் மட்டுமே 200 கோடி ரூபாய்களுக்கும் மேல் இந்தப் படம் வசூலித்திருந்தது. அஜித், விஜய், சூர்யா என முன்னணி நடிகர்களை இயக்கியுள்ள வெங்கட் பிரபு, அடுத்ததாக ரஜினிகாந்துடன் இணையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட் படத்தின் மேக்கிங் ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும் அதனால் அவர் வெங்கட் பிரபுவை அழைத்து பேசியதாகவும் தெரிகிறது. இந்தக் கூட்டணி குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

விஜய்யை இயக்கினால் ரஜினியுடன் கூட்டணி?: முன்னதாக விஜய்யுடன் நெல்சன் திலீப்குமார், லோகேஷ் கனகராஜ் இணைந்து பீஸ்ட், லியோ படங்களை இயக்கிய நிலையில் அவர்களுக்கு ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்துள்ளது. நெல்சன் ஜெயிலர் படத்தை மிகச்சிறப்பாக கொடுத்த நிலையில், தற்போது லோகேஷ் கூலி படத்தை மாஸாக உருவாக்கி வருகிறார். இதனிடையே, கோட் படத்தை இயக்கியுள்ள வெங்கட் பிரபுவிற்கும் அடுத்ததாக ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளதாக தெரிகிறது. விஜய்யை இயக்கினால், ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிடுவதாக தற்போது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X