twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்தேன்.. அதிர வைத்த ரஜினி!

    |

    சென்னை: தான் அவமதிக்கப்பட்ட இடத்தில் வெளிநாட்டு காரில் சென்று சிகரெட் பற்ற வைத்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

    தர்பார் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரைத்துறையை சேர்ந்த முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் ரஜினியின் அர்ப்பணிப்பு குறித்து புகழாரம் சூட்டினர். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியின் இறுதியாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார். அவர் பேசியதாவது,

    ரஜினி என் கூட பேசாட்டியும் பரவாயில்ல.. தர்பார் மேடையில் படுஆவேசமாக அரசியல் பேசிய நடிகர் லாரன்ஸ்!ரஜினி என் கூட பேசாட்டியும் பரவாயில்ல.. தர்பார் மேடையில் படுஆவேசமாக அரசியல் பேசிய நடிகர் லாரன்ஸ்!

    பிறந்தநாள் விழா

    பிறந்தநாள் விழா

    எனது பிறந்தநாளை ரசிகர்கள்க ஆடம்பரமாக கொண்டாட வேண்டாம். இது இசை வெளியீட்டு விழா அல்ல. எனது பிறந்தநாள் விழாவாக நினைத்துக் கொள்கிறேன்.

    ரஜினிகாந்த் பெயர்

    ரஜினிகாந்த் பெயர்

    ரஜினிகாந்த் எனும் பெயரை ஒரு நல்ல நடிகனுக்கு வைக்கலாம் என பாலச்சந்தர் யோசித்துக் கொண்டிருந்தார். என்னை பார்த்து நம்பிக்கை வைத்து எனக்கு அந்த பெயரை வைத்தார்.

    வீண்போகல

    வீண்போகல

    பாலச்சந்தர் என்னை நம்பினார். அவர் நம்பிக்கை வீண் போகல. நீங்களும் என்னை நம்புங்கள் உங்கள் நம்பிக்கை வீண் போகாது.

    வெளிநாட்டு காரில்

    வெளிநாட்டு காரில்

    சினிமாவுக்கு வந்த புதிதில் தயாரிப்பாளர் ஒருவரால் அவமதிக்கப்பட்டேன். அதனால் கோடம்பாக்கம் சாலையில் வெளி நாட்டு காரில் கால் மேல் கால் போட்டு போக வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

    அவமதிக்கப்பட்ட இடம்

    அவமதிக்கப்பட்ட இடம்

    பின்னாளில் இத்தாலி கார் ஒன்றை வாங்கினேன். அதனை வெளிநாட்டு ஓட்டுநரை ஓட்ட வைத்து நேராக கோடம்பாக்கம் சென்றேன். தயாரிப்பாளர் ஒருவரால் அவமதிக்கப்பட்ட இடத்தில் எனது காரை நிறுத்தி சிகரெட்டை பற்ற வைத்தேன்.

    எதிர்மறை வசனங்கள்

    எதிர்மறை வசனங்கள்

    நாம் வாழ்க்கையில் வெற்றி பெற நேரம் காலம் சந்தர்ப்பம் சூழ்நிலை ஆகியவை ரொம்ப முக்கியம். அரசியல் , ஊடகம் , சமூக வலைதளங்கள் அனைத்திலும் எதிர்மறை வசனங்கள் அதிகமாகி விட்டது.

    அரசுக்கு நன்றி

    அரசுக்கு நன்றி

    அன்பு செலுத்துவோம், சந்தோசமாக இருப்போம், என நடிகர் ரஜினிகாந்த் பேசினார். மேலும் தர்பார் இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழக அரசு, நேரு அரங்கத்தில் அனுமதி அளித்தற்கும் நன்றி தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.

    English summary
    Actor Rajinikanth shared a flash back in Darbar Audio launch fuction. Rajini was insulted by a Producer in the biging.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X