Rajinikanth: நெல்சனை மாற்ற சொன்னார்கள்.. உண்மையை போட்டுடைத்த சூப்பர்ஸ்டார்!

சென்னை: அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் அடுத்த வெளியீடாக ஜெயிலர் படம் ரிலீசாகவுள்ளது. அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் ஜெயிலர் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ஜெயிலர் ரிலீசாகிறது.

Actor Rajinikanth shared many things including director Nelson dilipkumar in Jailer audio release function

நெல்சன் குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த்: அண்ணாத்த படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ளது ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் பான் இந்தியா படமாக ஜெயிலர் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன்களில் கடந்த சில வாரங்களாக படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

அண்ணாத்த படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே ஜெயிலர் படத்தையும் தயாரித்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. அனிருத் இசையில் இந்தப் படத்தின் காவாலா, ஹுகும் பாடல்கள் அதிகமாக ரசிகர்களை கவர்ந்து, யூடியூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. இதனிடையே இந்தப் படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

முன்னதாக நெல்சன் இயக்கத்தில் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனாலும் வசூலில் சிறப்பாக அமைந்தது. இந்தப் படத்தின் சூட்டிங்கின்போதே, ரஜினியின் ஜெயிலர் படத்தில் நெல்சன் கமிட்டானார். இதனிடையே, பீஸ்ட் படத்தின் கலவையான விமர்சனங்களை அடுத்து, ஜெயிலர் படத்திலிருந்து நெல்சன் திலீப்குமாரை நீக்க விநியோகஸ்தர்கள் தன்னிடம் வற்புறுத்தியதாக நேற்றைய தினம் ஜெயிலர் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரஜினி தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் சன் பிக்சர்ஸ் டீமுடன் இணைந்து அனைவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில், இந்தத் தகவலை ஒப்புக் கொண்ட சன் பிக்சர்ஸ், பீஸ்ட் படத்தின் விமர்சனங்கள் மிகவும் மோசமாக வந்துள்ளதாகவும் ஆனாலும் வசூல்ரீதியாக படம் விநியோகஸ்தர்களுக்கு நல்ல லாபத்தையே கொடுத்துள்ளதாகவும் பாக்ஸ் ஆபிசில் படம் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியதாகவும் ரஜினி தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.

இதையடுத்தே, நெல்சன் திலீப்குமார் ஜெயிலர் படத்தின் இயக்குநராக உறுதியானதையும் அவர் தெரிவித்தார். பீஸ்ட் படத்தின் ரிலீசையடுத்து, நெல்சன் ஜெயிலர் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனாலும் அவரை இந்தப் படத்தின் இயக்குநராக சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்த விஷயம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிலையில் தற்போது ஜெயிலர் படம் சிறப்பாக உருவாகியுள்ளது. படம் ரசிகர்களிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X