Kanguva movie: கங்குவா இசை வெளியீட்டில் இணைந்த சூப்பர்ஸ்டார்.. இந்த படமே அவர் நடிக்க வேண்டியதா?

சென்னை: நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள கங்குவா படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் 14ம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், சென்னை, ஐதராபாத், மும்பை, டெல்லி என சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பறந்து பறந்து பிரமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிவா இயக்கத்தில் அதிகமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா படத்தின் இசை வெளியீடு இன்றைய தினம் சென்னையில் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இணைந்து படம் குறித்த சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தும் இணைந்திருந்தார்.

rajinikanth kanguva movie suriya

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் அடுத்த மாதம் 14ம் தேதி பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் ரசிகர்களிடையே காணப்படுகிறது. சர்வதேச தரத்தில் தமிழில் ஒரு படம்அதிகமான பொருட் செலவில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது தமிழ் ரசிகர்களிடையே மிகபெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலி படத்திற்கு இணையாக கங்குவா படம் உருவாகியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்தப் படத்தின் தலைப்பு கங்குவா என்று வைக்கப்பட்டுள்ளது. கங்குவா என்றால் நெருப்பில் நாயகன் என்று பொருள்.

கங்குவா இசை வெளியீடு: இதன் தலைப்பிற்கு ஏற்ப படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் நெருப்பாக கொடுத்து வருகின்றனர் படக்குழுவினர். படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள நிலையில், அவர்தான் கங்குவன் என்ற தலைப்பை கங்குவா என்று மாற்றியதாக படக்குழுவினர் முன்னதாக படத்தின் பிரமோஷனின்போது தெரிவித்துள்ளனர். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், இன்றைய தினம் சென்னையில் படத்தின் இசை வெளியீடு மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவக்குமார் என குடும்பமாக பங்கேற்றனர். மேலும் பாபி தியோல், ஆர்ஜே பாலாஜி, யோகி பாபு, கருணாஸ் உள்ளிட்டவர்களும் பங்கேற்று படத்தின் சுவாரஸ்யத்தை பகிர்ந்தனர்.

ரஜினிகாந்த் வாழ்த்து: இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்தும் பங்கேற்றார். வீடியோ மூலம் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசி, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கு தன்னுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார். தான் முன்னதாக இயக்குநர் சிவாவிடம் தனக்காக ஒரு பீரியட் படம் செய்யும்படி கேட்டதாகவும் அவரும் சரி என்று தலையாட்டியதாகவும் கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த், அப்படி பார்த்தால், கங்குவா படம் தனக்காக தயார் செய்யப்பட்ட படமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து சிவா தனக்காகவும் இதுபோன்ற ஒரு கதையை உருவாக்குவார் என்றும் ரஜினிகாந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

rajinikanth kanguva movie suriya

வீடியோ மூலம் பாராட்டு: வித்தியாசமான கதைகளை தயாரிப்பதில் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா மிகுந்த விருப்பம் உடையவர் என்று பாராட்டு தெரிவித்த ரஜினிகாந்த், இந்த ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் கேட்டபோது, சூட்டிங்கில் இருந்ததால் தன்னால் பங்கேற்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார். தான் இந்தப் படத்தின் இயக்குநர் சிவாவுடன் அண்ணாத்த என்ற ஒரு படத்தில்தான் பணியாற்றியதாகவும் ஆனால் 20 -30 படங்களில் பணியாற்றியது போன்ற நெருக்கம் அவருடன் ஏற்பட்டதாகவும் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். தொடர்ந்து கங்குவா படத்தின் நாயகன் சூர்யாவையும் பாராட்டி ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

சூர்யாவின் கண்ணியம்: சூர்யாவின் கண்ணியம், ஒழுக்கம் நேர்மை அனைவருக்கும் தெரிந்ததே என்று பாராட்டியுள்ள ரஜினிகாந்த், அவரை போன்ற ஒருவரை யாராலும் பார்க்க முடியாது என்றும் கூறியுள்ளார். சூர்யா வித்தியாசமான படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று சுட்டிக் காட்டியுள்ள ரஜினிகாந்த், அவரது விருப்பப்படியே கங்குவா படம் அமைந்துள்ளதாகவும் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X