வாழ்த்தி அனுப்பிய வைரமுத்து.. அமெரிக்காவிலிருந்து அப்டேட் செய்த ரஜினிகாந்த்.. குட் நியூஸ்!

சென்னை: மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் கவிஞர் வைரமுத்துவுடன் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அண்ணாத்த படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த டிசம்பர் மாதம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஹைத்ராபாத்தில் உள்ள மருத்துவமனையில் 3 நாட்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

அண்ணாத்த படப்பிடிப்பு

அண்ணாத்த படப்பிடிப்பு

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அப்போதே ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என கூறப்பட்டது. ஆனால் அண்ணாத்த படப்பிடிப்பு பணிகள் இருந்ததால் அமெரிக்க பயணத்தை தள்ளி வைத்தார் ரஜினி.

தனி விமானம் மூலம்

தனி விமானம் மூலம்

இந்நிலையில் கடந்த மாதம் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து கடந்த 19ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் மனைவி லதாவுடன் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.

அமெரிக்காவின் மயோ கிளினிக்

அமெரிக்காவின் மயோ கிளினிக்

ரஜினிகாந்த் அமெரிக்கா செல்ல விமானம் நிலையம் வந்த போட்டோக்கள் வீடியோக்கள் வெளியானது. இந்நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்காவின் மயோ கிளினிக்கில் மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவ பரிசோதனை முடித்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் வெளியே வந்த போட்டோ வெளியாகி வைரலானது.

வைரமுத்துவிடம் பேசிய ரஜினி

வைரமுத்துவிடம் பேசிய ரஜினி

மேலும் நடிகர் ரஜினிகாந்த் இன்னும் 3 வாரங்கள் அமெரிக்காவில் தங்கி ஓய்வெடுப்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கவிஞர் வைரமுத்துவிடம் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவில் இருந்து போனில் அழைத்து பேசியுள்ளார்.

ரஜினி அழைத்தார்

ரஜினி அழைத்தார்

இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் வைரமுத்து. அவர் பதிவிட்டிருப்பதாவது,

''அமெரிக்காவிலிருந்து
ரஜினி அழைத்தார்.

மருத்துவச் சோதனை
நல்ல வண்ணம்
நடந்தது என்றார்;
மகிழ்ந்தேன்.

அவர் குரலில்
ஆரோக்கியம் - நம்பிக்கை
இரண்டும் இழையோடக் கண்டேன்.

அவரன்பர்களின்
மகிழ்ச்சிக்காகவே
இதைப்
பதிவிட்டுப் பகிர்கிறேன்".. என்று ரஜினியின் டிவிட்டர் ஹேண்டிலை குறிப்பிட்டுள்ளார்.

நல்ல செய்தி சொன்னீர்கள்

நல்ல செய்தி சொன்னீர்கள்

கவிஞர் வைரமுத்துவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் செம ஹேப்பியாகியுள்ளனர். நல்ல செய்தி சொன்னீர்கள் என்றும் தலைவர் நன்றாகதான் இருப்பார் என்றும் பதிவிட்டு வரும் ரஜினி ரசிகர்கள் கவிஞர் வைரமுத்துவுக்கு நன்றியும் தெரிவித்து வருகின்றனர்.

அப்டேட் செய்த ரஜினி

அப்டேட் செய்த ரஜினி

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா செல்லும் முன்பாக கவிஞர் வைரமுத்து அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில் ரஜினிகாந்த் தனது மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு வைரமுத்துவுக்கு அப்டேட் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X