ஆபரேஷன் சிந்தூர்: ஓரு ராயல் சல்யூட்.. ரஜினி, விஜய் பாராட்டு!
சென்னை: பாக்கிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதியில் சுமார் 9 இடங்களில் சற்று முன் இந்திய போர் விமானங்கள் தாக்குதலை நடத்தியுள்ளது. பாக்கிஸ்தான் அரசு அலுவலகங்கள் உட்பட தீவிரவாதிகளின் நிலைகள் என்று 9 இடங்கள் என கண்டறியப்பட்ட இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவே பதற்றமாக இருக்கும் நிலையில், நடிகர் ரஜினிகாந்தும், நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்யும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த வாரம், தீவிரவாதிகள் நடத்திய பயங்கார தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் தனித்து விடப்பட்டு, ஆண்களை மட்டும் குறிவைத்து அவர்களின் மதம் என கேட்டு அப்பாவி சுற்றுலாப் பயணிகளை நெற்றியில் சுட்டு தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். ஜம்மு காஷ்மீரின் அமைதியை சீர்குலைக்க பஹல்காமில் திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆப்ரேஷன் சிந்தூர்: இந்த தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவிய நிலையில், 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய பாதுகாப்புப் படைகள், இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை இணைந்து இன்று அதிகாலை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கூடாரங்களை குறிவைத்து தாக்கியது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர்வைக்கப்பட்டுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கப்பட்டதுக்கு ஒரு ஆழமான அர்த்தம் உள்ளது. சிந்தூர் என்பதன் இன்னொரு அர்த்தம் 'திலகம்' ஆகும். இந்து கலாச்சாரத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் போன்ற திலகங்களைவைத்துக்கொள்வார்கள். பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி, இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களின் திலகங்களை அழித்தனர். அதற்கு பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' எனப் பெயரிடப்பட்டதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிரடி தாக்குதல்: இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் இருந்த 9 பயங்கரவாத தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றிகரமாக அழிக்கப்பட்டது. இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்ததற்காக ஜெய்ஷ் இ முகமது மற்றும் லஷ்கர் தலைமையின் உயர்மட்ட அலுவலங்களை குறிவைத்து, இந்தியப் படைகள் தாக்குதல்களுக்கான இடத்தைத் தேர்ந்தெடுத்து, முப்படைகளை திரட்டி பயங்கரவாத முகாம்களை குறிவைத்து வெடிமருந்துகளை பயன்படுத்தி இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.
The fighter's fight begins...
— Rajinikanth (@rajinikanth) May 7, 2025
No stopping until the mission is accomplished!
The entire NATION is with you. @PMOIndia @HMOIndia#OperationSindoor
JAI HIND 🇮🇳
ரஜினிகாந்த்: இதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், போராளியின் சண்டை தொடங்குகிறது... பணி நிறைவேறும் வரை நிறுத்த வேண்டாம்! முழு நாடும் உங்களுடன் உள்ளது. ஜெய் ஹிந்த் என பதிவிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதே போல நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தனது எக்ஸ் தளபக்கத்தில், இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு ராயல் சல்யூட் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











